மீண்டும் பிரித்தானியா திரும்ப விரும்பும் இளவரசர் ஹரி: தடையாக இருப்பது இந்த விடயம்தானாம்…
இளவரசர் ஹரி தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மீண்டும் பிரித்தானியா திரும்ப விரும்புவதாகவும், ஆனால் அவரது மனைவி மேகன் அது குறித்து அசௌகரியமாக உணர்வதாகவும், அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
தந்தையைக் காண ஓடோடிவந்த ஹரி
தன் தந்தையான மன்னர் சார்லசுக்கு உடல் நலம் சரியில்லை என தெரியவந்ததும் பல நூறு மைல் தூரம் பயணித்து, தந்தையைக் காண ஓடோடி வந்தார் இளவரசர் ஹரி.
அவர் மன்னரை சந்தித்துவிட்டு அமெரிக்கா திரும்பியபின் அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நான் மீண்டும் பிரித்தானியாவுக்குச் செல்வேன், என்னால் முடிந்தவரை என் குடும்பத்தினரை சந்திப்பேன் என்று கூறியிருந்தார்.
தடையாக இருப்பது இந்த விடயம்தான்…
இந்நிலையில், ஹரி, தான் மீண்டும் பிரித்தானியா திரும்பும்போது, தன் மனைவி மேகனும், தம்பதியரின் பிள்ளைகளான குட்டி இளவரசர் ஆர்ச்சி மற்றும் குட்டி இளவரசி லிலிபெட்டும் தன்னுடன் பிரித்தானியா வரவேண்டும் என விரும்புவதாகவும், மீண்டும் ராஜ குடும்பத்துடன் ஒரு இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள அது உதவலாம் என்று அவர் கருதுவதாகவும் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஹரியின் மனைவி மேகனோ, பிரித்தானியா திரும்ப சங்கோஜப்படுவதாகவும், அவர் பிரித்தானியாவுக்கு வரும்போது அசௌகரியமாக உணரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார் அந்த நபர்.
ஆக, மேகன் பிரித்தானியாவுக்கு வரும்போது, அவர் சகஜமாக உணர்வதற்கு வசதியாக, குடும்பத்துடன் ஜூம் அழைப்புகள் மூலம் அளவளாவிக்கொள்ள திட்டமிடப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.