Priyanka Chopra : அயோத்திக்கு ஆன்மீக சுற்றுலா சென்று… ராமரோடு செல்பி எடுத்து மகிழ்ந்த நடிகை பிரியங்கா சோப்ரா

தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இதையடுத்து பாலிவுட்டுக்கு சென்ற அவர் அங்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார். இதன்பின்னர் ஹாலிவுட்டுக்கு சென்ற நடிகை பிரியங்கா சோப்ரா, அங்கு பிரபல பாப் பாடகரான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

குழந்தை பெற்ற பின்னரும் ஹாலிவுட்டில் செம்ம பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார் பிரியங்கா சோப்ரா. இவர் நடிப்பில் கடைசியாக சிட்டாடெல் என்கிற வெப் தொடர் வெளியானது. ஹாலிவுட்டில் ஹிட் அடித்த இந்த வெப் தொடரை தற்போது பாலிவுட்டில் ரீமேக் செய்துள்ளனர் அதில் பிரியங்கா சோப்ரா நடித்த கேரக்டரில் நடிகை சமந்தா நடித்துள்ளார். ராஜ் மற்றும் டீகே இயக்கியுள்ள இந்த வெப் தொடர் விரைவில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

திருமணத்துக்கு பின்னர் தன்னுடைய கணவரோடு அமெரிக்காவில் செட்டிலான நடிகை பிரியங்கா சோப்ரா, அவ்வப்போது இந்தியாவுக்கு சுற்றுலா வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது தன்னுடையை பேமிலியோடு இந்தியாவுக்கு ஆன்மீக சுற்றுலா வந்துள்ள அவர், கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவிலுக்கு தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையோடு வந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்தபோது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, தன்னுடைய குழந்தைக்காகவும், குடும்பத்திற்காகவும் வேண்டிக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். அயோத்தி ராமர் கோவிலில் நடிகை பிரியங்கா சோப்ரா எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிந்துள்ளன.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *