புரோ கபடி லீக் – பிளே ஆஃப் சுற்று..எந்தெந்த அணிகள் தகுதி.. போட்டி அட்டவணை, தேதி.. முழு விவரம்
பத்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரின் பிளே – ஆஃப் சுற்று பிப்ரவரி 26 (திங்கள் கிழமை) முதல் துவங்க உள்ளது. லீக் சுற்றின் முடிவில் முதல் ஆறு இடங்களை பெற்ற அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இதில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பெற்ற அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு தகுதி பெறும். அதற்கு அடுத்த நான்கு இடங்களில் இருக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டிகளில் பங்கேற்கும். இரண்டு எலிமினேட்டர் போட்டிகள் நடைபெறும். அதில் வெற்றி பெறும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
அரை இறுதியில் முதல் இரண்டு இடங்களை பெற்ற அணிகளுடன் எலிமினேட்டரில் வென்ற இரண்டு அணிகள் மோதும். அதில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் புரோ கபடி லீக் இறுதிப் போட்டியில் மோதும். இறுதிப் போட்டி மார்ச் 1 அன்று நடைபெற உள்ளது.
புனேரி பல்தான், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்து நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறி உள்ளன. டபாங் டெல்லி, ஹரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் அடுத்த நான்கு இடங்களை பிடித்து எலிமினேட்டர் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன.
இந்த முறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. அந்த அணி முதல் பாதியில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்ததால் பின் பாதியில் வெற்றிகள் பெற்றும் போதிய புள்ளிகள் பெற முடியாமல் ஒன்பதாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
எலிமினேட்டர் போட்டி அட்டவணை –
பிப்ரவரி 26 –
எலிமினேட்டர் 1 – டபாங் டெல்லி – பாட்னா பைரேட்ஸ் –
எலிமினேட்டர் 1 – குஜராத் ஜெயன்ட்ஸ் – ஹரியானா ஸ்டீலர்ஸ்
அரை இறுதிப் போட்டிகள் அட்டவணை –
பிப்ரவரி 28 –
அரை இறுதி 1 – புனேரி பல்தான் – எலிமினேட்டர் 1இல் வெற்றி பெறும் அணி
அரை இறுதி 2 – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – எலிமினேட்டர் 2இல் வெற்றி பெறும் அணி
இறுதிப் போட்டி –
மார்ச் 1 –
அரை இறுதி 1இல் வெற்றி பெறும் அணி – அரை இறுதி 2இல் வெற்றி பெறும் அணி