புரோ கபடி புள்ளிப்பட்டியல் – செம ட்விஸ்ட்.. தமிழ் தலைவாஸ் பிளே-ஆஃப் செல்ல உதவிய குஜராத் டைட்டன்ஸ்
பத்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், அந்த அணியால் பிளே-ஆஃப் செல்ல முடியுமா? என்ற கேள்வி இருந்தது. ஆனால், தற்போது மற்ற அணிகளின் உதவியுடன் பிளே-ஆஃப் வாய்ப்பை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது தமிழ் தலைவாஸ் அணி.
தற்போது புள்ளிப் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது தமிழ் தலைவாஸ் அணி. பிளே-ஆஃப் இடத்தை உறுதி செய்ய முதல் ஆறு இடங்களில் இடம் பெற வேண்டும் என்ற நிலையில் ஆறாவது இடத்தில் இருந்து ஒன்பதாவது இடம் வரை இருக்கும் அணிகளை குறி வைத்து ஆடி வருகிறது தமிழ் தலைவாஸ். அந்த அணிகள் ஆடும் போட்டிகள் முக்கியமானதாக மாறி உள்ளது.
அதில் யு மும்பா அணி முன்னதாக 13 போட்டிகளில் ஆடி 37 புள்ளிகளுடன் இருந்தது. தமிழ் தலைவாஸ் அணி 35 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில் யு மும்பா அணி கூடுதல் புள்ளிகள் பெறாமல் இருக்க வேண்டும் என எதிர்பார்த்து இருந்தது. அதற்கேற்ப புனேரி பல்தான் அணி, யு மும்பா அணியுடன் போட்டியை டை செய்தது. அதனால் 3 புள்ளிகள் மட்டுமே பெற்று 40 புள்ளிகளுடன் இருந்தது யு மும்பா.
இந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வி அடைந்தது யு மும்பா. நான்காம் இடத்தில் இருக்கும் குஜராத் அணி பெற்ற வெற்றியால் தமிழ் தலைவாஸ் அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதே சமயம் ஏழாம் இடத்தில் இருக்கும் யு மும்பா தோல்வி அடைந்து, அதே 40 புள்ளிகளுடன் இருப்பது தமிழ் தலைவாஸ் அணியின் பிளே-ஆஃப் வாய்ப்புக்கு சாதகமான விஷயமாக மாறி உள்ளது. அந்த வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி தமிழ் தலைவாஸ் அணிக்கு உதவி உள்ளது.
தற்போது புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணியின் பிளே-ஆஃப் வாய்ப்புக்கு குறுக்கே உள்ள ஆறாவது இடத்தில் இருந்து ஒன்பதாவது இடம் வரை இடம் பெற்றுள்ள அணிகள் –
பாட்னா பைரேட்ஸ் – 42 புள்ளிகள் – 6வது இடம் யு மும்பா – 40 புள்ளிகள் – 7வது இடம் பெங்கால் வாரியர்ஸ் – 38 புள்ளிகள் – 8வது இடம் பெங்களுரு புல்ஸ் – 37 புள்ளிகள் – 9வது இடம்
தமிழ் தலைவாஸ் அணி இன்னும் இரண்டு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் ஆறு அல்லது ஏழாவது இடத்துக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது. தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் 7 லீக் போட்டிகள் உள்ளன. அதனால் பிளே-ஆஃப் வாய்ப்பு இப்போதைக்கு பிரகாசமாக உள்ளது. எனினும், தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்தால் நிலைமை தலைகீழாக மாறிவிடும்.
புரோ கபடி லீக் புள்ளிப் பட்டியல் (90வது லீக் போட்டியின் முடிவில்) –
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – 63 புள்ளிகள் – 1வது இடம்
புனேரி பல்தான் – 60 புள்ளிகள் – 2வது இடம்
டபாங் டெல்லி – 54 புள்ளிகள் – 3வது இடம்
குஜராத் டைட்டன்ஸ் – 49 புள்ளிகள் – 4வது இடம்
ஹரியானா ஸ்டீலர்ஸ் – 45 புள்ளிகள் – 5வது இடம்
பாட்னா பைரேட்ஸ் – 42 புள்ளிகள் – 6வது இடம்
யு மும்பா – 40 புள்ளிகள் – 7வது இடம்
பெங்கால் வாரியர்ஸ் – 38 புள்ளிகள் – 8வது இடம்
பெங்களுரு புல்ஸ் – 37 புள்ளிகள் – 9வது இடம்
தமிழ் தலைவாஸ் – 35 புள்ளிகள் – 10வது இடம்
யுபி யுத்தாஸ் – 23 புள்ளிகள் – 11வது இடம்
தெலுகு டைட்டன்ஸ் – 16 புள்ளிகள் – 12வது இடம்