அரசியல் கட்சிக்கு நன்கொடை அளித்தால் சிக்கலா? என்ன சொல்கிறது வருமான வரி சட்டம்?

இளங்கோ, தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்லும் நபர், அவருக்கென தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் உள்ளன.

அவர் தனக்கு பிடித்த அரசியல் கட்சிக்கு நன்கொடை வழங்க விரும்புகிறார்.ஆனால் இது வருமான வரி கணக்கில் சிக்கலை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. சரி, எந்த வித சிக்கலும் இல்லாமல் அரசியல் கட்சிக்கு நன்கொடையும் அளித்து, வருமான வரி விலக்கும் கோருவது எப்படி என விரிவாக பார்க்கலாம்.

பிரிவு 80GGC: வருமான வரி சட்டத்தின் பிரிவு 80GGC, தனிநபர்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடைக்கு வரி விலக்கு அளிக்கிறது. அரசியல் கட்சிகள் அல்லது தேர்தல் அறக்கட்டளைகளுக்கு தனிநபர்கள் நிதி பங்களிப்பு செய்வதை எளிதாக்கும் ஒரு பிரிவு தான் இது. அரசியல் கட்சிகளுக்கான நிதி வருகை மற்றும் செலவினம் ஆகியவற்றில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்கவும் இந்த பிரிவு உதவுகிறது.

பிரிவு 80GGC-ல் நிறுவனங்கள் , உள்ளூர் அரசு அமைப்புகள் தவிர மற்ற தனிநபர்கள் அனைவரும் வரி விலக்கு கோர முடியும்.இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்லது தேர்தல் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கும் இந்திய நிறுவனங்கள் மட்டுமே வரி விலக்கு கோர முடியும்.நன்கொடை பெறும் அரசியல் கட்சி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்,

1951 பிரிவு 29A இன் கீழ் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்தேர்தல் அறக்கட்டளை என்பது நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவு 8இன் கீழ் உருவாக்கப்பட்ட லாப நோக்கமற்ற நிறுவனமாக இருக்க வேண்டும்தேர்தல் அறக்கட்டளைகள் மற்ற நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்று , பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம்.

100% வரி விலக்கு கிடைக்குமா?ஒரு பதிவு செய்யப்பட்ட தேர்தல் அறக்கட்டளை அல்லது அரசியல் கட்சிக்கு , தனிநபர் வழங்கும் நன்கொடையில் 100% வரி விலக்கு கோரலாம். ஆனால் மொத்த வரி விலக்கு என்பது அந்த தனி நபரின் மொத்த வருமானத்தை விட அதிகமாக இருக்க முடியாது .பரிசுப் பொருளாக வழங்கினால்.

அரசியல் கட்சிகள் அல்லது தேர்தல் அறக்கட்டளைகளுக்கு ரொக்கமாக அளிக்கப்படும் பங்களிப்புகள் அல்லது நன்கொடைகள் வரிவிலக்குகளுக்கு தகுதியற்றவை. இந்த திருத்தம் 2013 – 2014 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.

அதே போல பரிசு பொருட்களுக்கு வரி விலக்கு கிடைக்காது.உங்களது நன்கொடையை காசோலை, வரைவோலை மற்றும் மின்னணு பரிமாற்றம் ஆகிய வழிகளில் செலுத்தி இருந்தால் 100% வரி விலக்கு கிடைக்கும்.என்னென்ன ஆவணங்கள் தேவை?நன்கொடை அளித்ததற்கான ரசீதுரசீதில் அரசியல் கட்சியின் பெயர், முகவரி, PAN, TAN ஆகியவை இருக்க வேண்டும்பணம் செலுத்திய முறை, எவ்வளவு பணம் ஆகிய விவரங்களும் இடம்பெற வேண்டும்பிரிவு 80GGBக்கும் பிரிவு 80GGCக்கும் உள்ள வேறுபாடு

பிரிவு 80GGBஇல் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடைக்கு விலக்கு கிடைக்கிறது , பிரிவு 80GGCஇல் தனிநபர் வழங்கும் அரசியல் சார்ந்த நன்கொடைகளுக்கு விலக்கு கிடைக்கிறது.ஒரு வேளை நீங்கள் பணியாற்றும் நிறுவனம் உங்களுக்கு படிவம் 16ஐ வழங்குகிறது என்றால், நீங்கள் எந்த அரசியல் கட்சிக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்ற விவரத்தை வழங்கி படிவத்தில் சேர்க்க வேண்டும்.

அரசு ஊழியர்களும் நன்கொடை வழங்கலாமா?நிச்சயமாக அரசு ஊழியர்களும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் வழங்கலாம். ஆனால் அவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில் இருக்க கூடாது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *