அயோத்தி ராமர் கோயிலால் லாபம் அடையபோகும் 12 நிறுவன பங்குகள்..!
உத்தர பிரதேசம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ஜனவரி 22 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
உலகம் முழுவதுமுள்ள பக்தர்கள் ராமர் கோயிலுக்கு வருவார்கள் என்பதால் அயோத்தி மிகப்பெரிய ஆன்மீக சுற்றுலா தளமாக மாறும் எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் தினமும் 3 லட்சம் பக்தர்கள் அயோத்திக்கு வரக்கூடும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எனவே அயோத்தியை மையமாக கொண்ட விருந்தோம்பல், பயணம் மற்றும் சுற்றுலா துறையை சேர்ந்த நிறுவனங்கள் நல்ல வருமானம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அயோத்தியை மையமாக கொண்ட விருந்தோம்பல், பயணம் மற்றும் சுற்றுலா துறையை சேர்ந்த நிறுவன பங்குகளை பரிசீலனை செய்யலாம்.
அயோத்தி சுற்றுலா தளமாக வளர்ச்சி கண்டால் பலன் அடையும் சில நிறுவன பங்குகள் குறித்து சிறு பார்வை இதோ.1. பிரவேக்: குஜராத்தை சேர்ந்த பிரவேக் லிமிடெட் நிறுவனம் கண்காட்சி மேலாண்மை, நிகழ்ச்சி மேலாண்மை, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மற்றும் வெளியீடு போன்ற பல்வேறு வணிகபிரிவுகளில் வலுவான வர்த்தகத்தை கொண்டுள்ளது.அயோத்தி, ரான் ஆஃப் கட்ச், வாரணாசி, டாமன் அண்ட் டையூ மற்றும் சர்தார் சரோவா உள்ளிட்ட பல இடங்களில் சொகுசு கூடார நகரங்கள் மற்றும் சொகுசு ஓய்வு விடுதிகளை வழங்குகிறது.
இந்த ஆண்டில் இதுவரை இந்நிறுவன பங்கின் விலை 50 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. நேற்று மும்பை பங்குச் சந்தையில இப்பங்கின் விலை ரூ.1,070.30ஆக இருந்தது.2. இந்தியன் ஹோட்டல்ஸ்: அயோத்தியில் பட்ஜெட் முதல் நட்சத்திர வகை வரையிலான அனைத்து ஹோட்டல் இடங்களுக்கான தேவை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். இந்தியன் ஹோட்டல் நிறுவனம் ஏற்கனவே இரண்டு சொத்துக்களை கொண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவன பங்கின் விலை ரூ.483ஆக இருந்தது.3. தாஜ் ஜிவிகே ஹோட்டல்ஸ்: ஹைதராபாத்தை சேர்ந்த ஜிவிகே குழுமம் மற்றும் இந்தியன் ஹோட்டல்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டு வர்த்தக நிறுவனம் தாஜ் ஜிவிகே ஹோட்டல்ஸ் அண்டு ரிசார்ட்ஸ். மும்பை பங்குச் சந்தையில் நேற்று இந்நிறுவன பங்கின் விலை ரூ.247.55ஆக இருந்தது.4.