சென்னையில் வீடுகளில் நடக்கும் விபசாரம்.. இரண்டு பகுதிகளில் சிக்கிய பெண்கள்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை புழல் மற்றும் மண்ணடி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக வந்த புகாரில் இளம் பெண் உள்பட சிக்கிய நான்கு பேர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னையில் வீடுகளில் ரகசியமாக விபசாரம் நடப்பது குறித்து கேள்விப்பட்டு, அடிக்கடி போலீசார் சோதனை நடத்துகிறார்கள். அப்படி சோதனை நடத்தும் போது பிடிபடும் புரோக்கர்களை கைது செய்கிறார்கள். இதேபோல் விபச்சாரம் செய்யும் இளம் பெண்களை பிடித்து காப்பகத்தில் சென்னை போலீசார் ஒப்படைக்கிறார்கள்.
அங்கிருந்து சில வாரங்களில் சொந்த ஊர் சொல்லும் அவர்கள்அங்கு சிறிது காலம் இருந்துவிட்டு மீண்டும் சென்னை வருகிறார்கள். அவர்கள் பிடிப்பட்ட பகுதியை தவிர வேறு பகுதிகளில் வீடு எடுத்து புரோக்கர்களின் உதவி உடன் விபச்சாரம் செய்கிறார்கள்.
மசாஜ் என்ற பெயரிலும் சிலர் விபச்சாரம் செய்கிறார்கள். போலீசார் நடத்தும் ரகசிய சோதனையில் சிக்கினாலும், மீண்டும் மீண்டும் புரோக்கர்கள் விபசாரத்தில் பெண்களை தள்ளி, தொழிலை தொடர்கிறார்கள். அந்த வகையில் சென்னையை அடுத்த புழல் சூரப்பட்டு சாலையில் உள்ள சிவப்பிரகாசம் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் பேரில் உடனடியாக விபசார தடுப்பு பிரிவு போலீசார் , புழல் சிவப்பிரகாசம் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்று தீவிரமாக சோதனை செய்தனர். அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது விசாரணையில் உறுதியானது. இது தொடர்பாக பெண் தரகரான பவானி(வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தார்கள் அவரிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்த வைத்திருந்த இளம்பெண்ணை மீட்டு போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதேபோல் சென்னை மண்ணடி பவளகாரன் தெருவில் உள்ள ஒரு வீட்டிலும் விபசாரம் நடப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த மோகன் (39), கும்பகோணத்தைச் சேர்ந்த ரமேஷ் (49), ஈரோட்டை சேர்ந்த மணிமாறன் (46) ஆகிய 3 தரகர்களை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த 2 பெண்களை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் சேர்த்தார்கள்.