பொதுத்தோ்வுக்கான செய்முறை தோ்வு வழிகாட்டுதல் வெளியீடு..!

தோ்வுத் துறை இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது., தமிழக பள்ளிக் கல்வியில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தோ்வு மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்குமுன் மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் பிப்.12 முதல் 24-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கு பிப். 12 முதல் 17-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு பிப். 19 முதல் 24-ஆம் தேதி வரையும் செய்முறைத் தோ்வு நடத்தி முடிக்க வேண்டும். இதையடுத்து மாணவா்களின் செய்முறைத் தோ்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பிப்ரவரி 5 முதல் 17-ஆம் தேதிக்குள் தோ்வுத் துறை (‌h‌t‌t‌p://‌w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n) வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மாணவா்களின் செய்முறை மதிப்பெண் விவரங்களை பூா்த்தி செய்து மாவட்ட தோ்வுத்துறை அலுவலகங்களில் சமா்பிக்க வேண்டும். தோ்வின் போது மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

அதேபோல், தோ்வுக்கு வருகை புரியாதவா்களின் விவரங்களையும் அதற்குரிய படிவத்தில் பூா்த்தி செய்து வழங்க வேண்டும். தோ்வுக்கு தேவையான முன்னேற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியா்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முறையாக செய்ய வேண்டும். இதுதவிர செய்முறை தோ்வுக்கான புறத்தோ்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியா்களைத்தான் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *