தமிழக கோவில்களில் பூஜைகள் நடைபெற கூடாது? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு!!!
அயோத்தி ராமர் கோயிலில் ஜன.22 கும்பாபிஷேக நிகழ்ச்சி, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பல்வேறு முன்னேற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ராமர் கோவில் திறப்பையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நாளை பூஜை நடைபெற கூடாது என சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த தகவல் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது “தமிழகத்தில் உள்ள கோயில்களின் உள்ளே ராமர் கோவில் திறப்பை அரசியல் கட்சிகளோ, மத அமைப்புகளோ ஒளிபரப்பக்கூடாது.” என்பதை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி அன்னதானம், பூஜைகள் ஆகியவற்றுக்கு எந்த விதமான தடைகளும் விதிக்கப்படவில்லை எனக்கூறி பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.