இதை நெற்றி பொட்டில் வைத்தால் வெற்றி நிச்சயம்..!
ஆனால் தீய சக்திகளால் அவை தடைபட்டு போய்விடும். நாம் எண்ணிய காரியங்களில் வெற்றி, முன்னேற்றம் காண 3 பொருட்கள் கொண்ட விபூதி தயாரித்து நெற்றியில் பட்டை அல்லது பொட்டு வைத்துக் கொண்டு வெளியில் செல்லவும்.
இந்த விபூதி தீய சக்திகளை நெருங்க விடமால் பார்த்துக் கொள்ளும்.
தேவையான பொருட்கள்:
*வேப்பிலை
*வெட்டி வேர்
*விபூதி
ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை மற்றும் வெட்டி வேரை உலர்த்தி தனித்தனியாக பவுடராக்கி கொள்ளவும்.
ஒரு தட்டில் ஒரு ஸ்பூன் வேப்பிலை பவுடர், ஒரு ஸ்பூன் வெட்டி வேர் பவுடர் சேர்த்து கலந்து விடவும். அடுத்து ஒரு ஸ்பூன் விபூதி சேர்த்து கலந்து தண்ணீர் சேர்த்து குழைத்து நெற்றியில் பொட்டு அல்லது பட்டை போட்டுக் கொள்ளவும்.
இந்த விபூதி நமக்கு நேர்மறை சிந்தனைகளை அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான வழி பிறக்கும்.
எதிரிகள் தொல்லை, தீய சக்திகள் அனைத்தும் நீங்கி வெற்றிக்கான கதவு திறக்கும்.