“கால் அமுக்கி விடு” அரசு விடுதியில் சிறுமிகளுக்கு டார்ச்சர்.. போலீஸ் விசாரணை..!!
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் அரசு மகளிர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் இரண்டு பெண் பாதுகாவலர்கள் அங்கு தங்கியுள்ள சிறுமிகளை தங்களது கால்களை அமுக்கி விட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அதோடு தாங்கள் கூறும் படி நடக்காவிட்டால் பிவாண்டி ரிமாண்ட் ஹோமுக்கு அனுப்பி விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் எஃப் ஐ ஆர் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.