புடின் எதிர்க்கட்சித் தலைவர் ஒரே குத்தில் கொல்லப்பட்டார்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்

புடின் விமர்சகரான அலெக்சி நவல்னி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள விடயம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் ஒரே குத்தில் கொல்லப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய செய்தி
ரஷ்ய ஜனாதிபதியாகிய விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சிப்பவரும், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருமான அலெக்சி நவல்னி (47), வெள்ளிக்கிழமையன்று அவர் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையிலேயே மரணமடைந்ததாக வெளியான செய்தி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

காரணம், புடினை எதிர்ப்பவர்கள் மாயமாவதும், சிறையிலடைக்கப்படுவதும், உயிரிழப்பதும் வழக்கமாகிவிட்டது என்று மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கூறியிருந்தார்கள். ஆக, அலெக்சியின் மரணம் குறித்த செய்தி வெளியானதுமே, அவரது மரணத்துக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின் தான் காரணமாக இருக்கக்கூடும் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மற்றொரு தகவல்
இந்நிலையில், அலெக்சி நவல்னி ஒரே குத்தில் கொல்லப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, இந்த ஒரே குத்தில் கொல்லுதல் என்பது, ரஷ்ய ரகசிய உளவுத்துறை பின்பற்றும் ஒரு பயங்கர விடயம் என்கிறார் ரஷ்யாவில் பிறந்த மனித உரிமைகள் ஆர்வலரான Vladimir Osechkin என்பவர்.

ஏற்கனவே அலெக்சியின் உடலில் காயங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், தான் கூறுவது சாத்தியம்தான் என்கிறார் அவர்.

அதாவது, ரஷ்ய உளவாளிகள், தாங்கள் கொல்ல முடிவு செய்துள்ளவரை நடுங்கும் குளிரில், கொட்டும் பனியில் நீண்ட நேரமாக நிறுத்துவார்களாம். நடுங்கவைக்கும் குளிரால் உடலின் இரத்த ஓட்டம் குறைந்துவரும் நிலையில், அவரது இதயம் இருக்கும் இடத்தில், அதாவது, மார்பில் ஓங்கி ஒரே ஒரு முறை குத்தினால் கூட, குத்துப்பட்டவர் உயிரிழந்துவிடுவாராம்.

ரஷ்ய ரகசிய உளவாளிகளுக்கு இந்த விடயத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கும் Vladimir Osechkin, அலெக்சி இருந்த அதே சிறையில் முன்னர் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலையான கைதிகள், அந்த சிறையில் பணிபுரியும் ஜெயிலர்கள், இதேபோல ஒரே குத்தில் சிறைக்கைதிகளைக் கொல்வதை தாங்கள் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் கூறுகிறார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *