முதல் படத்திலே 60 வயது நடிகருக்கு ஜோடியாகும ரச்சிதா! அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகை ரக்ஷிதா கன்னட சினிமாவில் ஹீரோயினாக நடிக்க இருக்கும் நிலையில், இதில் 60 வயது அரசியல்வாதிக்கு ஜோடியாக நடிக்கின்றார்.

நடிகை ரச்சிதா
கன்னட சீரியல் நடிகையான ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, பிரபல டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்கிற தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் ரக்ஷிதா. பல தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரில் ஜோடியாக நடித்த தினேஷை ரக்ஷ்தா காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்ட பிறகு இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ரக்ஷிதாவை வனிதாவின் முன்னாள் கணவரான ராபர்ட் மாஸ்டர் ஒருதலையாக காதலித்து வந்தார்.

ஆனால் பிக் பாஸிலிருந்து வெளியேறிய பின்பு அவரவர் வேலையை பார்த்து வருகின்றனர். பிக்பாஸிற்கு பின்பு பயங்கர பிஸியில் காணப்படுகின்றார் ரச்சிதா.

ஹீரோயினாக ரச்சிதா
தற்போது தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளிலும் ரச்சிதாவிற்கு படவாய்ப்பு குவிந்து வருகின்றது.

தமிழில் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ள ரச்சிதா, கன்னடத்தில் ரங்கநாயகா என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார்.

அப்படத்தில் அவர் ஜக்கேஷ் என்பவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஜக்கேஷிற்கு 60 வயதாகும் நிலையில் தற்போது எம்பி ஆகவும் பதவி வகித்து வருகிறார்.

ஜக்கேஷுக்கு ஜோடியாக ரச்சிதா நடித்துள்ள ரங்கநாயகா திரைப்படம் மார்ச் 8-ந் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ரச்சிதா முதல் படத்தில் 60 வயது நடிகருக்கு ஜோடியாவது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *