Radhika Apte: நடிகைகளை மிக மோசமாக நடத்தும் தெலுங்கு சினிமாக்காரர்கள்: வைரலாகும் ராதிகா ஆப்தேவின் பேச்சு!

டிகைகளை மிக மோசமாக நடத்துவதாக டோலிவுட் சினிமாத் துறையை கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.

 

ராதிகா ஆப்தே

‘கபாலி’ படத்தின் மூலமாக கோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. அந்தாதுன், லஸ்ட் ஸ்டோரீஸ், சோக்ட் முதலிய பாலிவுட் படங்களில் நடித்து பரவலாக அறியப்பட்டார். தமிழ், தெலுங்கு, இந்தி , மராத்தி, பெங்காலி என பல்வேறு மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். சினிமாத் துறையில் பெண்களுக்காக தொடர்ச்சியாக குரலெழுப்பி வருபவர் ராதிகா ஆப்தே. தனது உடலை காரணமாக வைத்து, தான் நடிக்க வேண்டிய படங்களில் வாய்ப்புகளை இழந்ததாக அவர் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

“வேற நடிகைக்கு தன்னை விட பெரிய உதடுகள் மற்றும் பெரிய மார்பகங்கள் இருந்ததால் நான் சமீபத்தில் ஒரு படத்தில் இருந்து நிராகரிக்கப்பட்டேன். அவர் என்னை விட அதிக கவர்ச்சியாக உள்ளார். அதிக விலைக்கு செல்வார் என்றும் காரணம் தெரிவித்தனர். மேலும், நான் நிராகரிக்கப்பட்ட அந்தப் படம் ஒரு நல்ல படம். நான் மதிக்கும் நபர்களால் தயாரிக்கப்பட்டது. நீங்கள் சில நபர்களைப் பார்த்து, இவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுப்படமாட்டார்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால் அவர்களும் அத்தகைய மனநிலையுடன் இருக்கின்றனர். பெண்கள் எந்த அளவுக்கு இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு மனிதர்களிடம் மாற்றங்களும் நிகழ்கிறது” என்று அவர் இது தொடர்பாக கூறியிருந்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *