ராதிகா சரத்குமாரின் மொத்த சொத்து மதிப்பு.., அரசுக்கு செலுத்த வேண்டியதே இத்தனை கோடியாம்
விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன.
ராதிகா சரத்குமார் சொத்து மதிப்பு
விருதுநகர் மக்களவை தொகுதியில் ராதிகா சரத்குமார் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் மூலம் அவரது சொத்து மதிப்பு பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது.
ராதிகா சரத்குமாருக்கு 27 கோடி ரூபாயில் அசையும் சொத்துக்களும், 26 கோடி ரூபாயில் அசையா சொத்துக்களும் உள்ளன என்று வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல சரத்குமாருக்கு 8 கோடி ரூபாயில் அசையும் சொத்துக்களும், 21 கோடி ரூபாயில் அசையா சொத்துக்களும் உள்ளன.
இதனிடையே, ராதிகா சரத்குமார் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை 6 கோடி ரூபாய் ஆகும். அதில், வருமான வரி நிலுவை ரூ.3.9 கோடி மற்றும் ஜிஎஸ்டி நிலுவை ரூ.2.6 கோடி ஆகும்.
அதேபோல சரத்குமார் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.8 கோடி ஆகும். அதில், வருமான வரி நிலுவை ரூ.3.8 கோடி மற்றும் ஜிஎஸ்டி நிலுவை ரூ.4.4 கோடி ஆகும்.
அதுமட்டுமல்லாமல், ராதிகா சரத்குமாருக்கு கடனாக ரூ.14 கோடியும், சரத்குமாருக்கு கடனாக ரூ.19 கோடியும் உள்ளது.