அட்டகாசமான பருப்பு கீரை கடையல் : இது செம்ம சுவையாக இருக்கும்
ஒரு முறை இப்படி பருப்பு கீரை கடையல் செய்து பாருங்க. செம்ம சுவையாக ஒருக்கும்.
தேவையான பொருட்கள்
2 கட்டு தொய்யக் கீரை
50 கிராம் துவரம் பருப்பு
3 பச்சை மிளகாய்
6 சின்ன வெங்காயம்
3 பல் பூண்டு
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பூன் சாம்பார் பொடி
அரை டீஸ்பூன் சீரகம்
1 தக்களி
2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
கடுகு
உளுந்தம் பருப்பு
1 கைபிடி வெங்காயம்
செய்முறை: குக்கரில் துவரம் பருப்பை, தண்ணீர், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் முழுதாக, தக்காளி, பூண்டு, மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, உப்பு, சீரகம் சேர்த்து 3 விசில் விட்டு வேக வைக்கவும். இனியொரு பாத்திரத்தில் கீரையை சுத்தம் செய்து சேர்த்து கொக்கவும். தொடர்ந்து அதில் தண்ணீர் ஊற்றி கீரையை வேக வைக்கவும். தொடர்ந்து இந்த கீரையை குக்கரில் சேர்த்து மசிக்கும். இதில் எண்ணெ கடுகு, உளுந்தம் பருப்பு, வெங்காயம் நறுக்கியது சேர்த்து தாளித்து கொட்டவும். அட்டகாசமான பருப்பு கீரை கடையல் ரெடி. செம்ம சுவையாக இருக்கும்