பார்சிலோனாவில் தரையிறங்கிய சுவிஸ் விமானத்தில் கதிரியக்க கசிவு! மூன்று மணிநேரம் சிக்கிய பயணிகள்

சுவிட்சர்லாந்தில் இருந்து கிளம்பிய விமானத்தில் கதிரியக்க கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் சுற்றி வளைக்கப்பட்டது.

சுவிஸ் Air Jet விமானம்
சுவிஸின் சூரிச் விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்று 127 பயணிகளுடன் ஸ்பெயினின் பார்சிலோனாவுக்கு கிளம்பியது.

பார்சிலோனா விமான நிலையத்தை அடைந்தபோது விமானத்தில் இருந்த சூட்கேஸ் ஒன்றிலிருந்து கதிரியக்க கசிவு ஏற்பட்டதாக தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, சுவிஸ் Air Jet விமானமானது அங்கேர் சுற்றி வளைக்கப்பட்டது. உடனடியாக விமான அவசர நிலைகளுக்கான குழுக்கள் மற்றும் கதிரியக்க நிபுணர்கள் அழைக்கப்பட்டனர்.

இதனால் பயணிகள் அனைவரும் விமானத்திலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பணியாளர்கள் ஐவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சந்தேகத்திற்கிடமான கதிரியக்க கசிவு கண்டுபிடிக்கப்பட்டபோது, சூட்கேஸ் ஏற்கனவே விமானத்தில் இருந்ததால் பயணிகள் விமானத்தில் இருந்து இறங்க அனுமதிக்கப்படவில்லை.

ஆபத்து இல்லை
Aena நிறுவனம், உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிக்குப் பிறகு ‘ஆபத்து இல்லை’ என்பதை சரிபார்த்த பிறகு, எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் எச்சரிக்கை செயலிழக்கச் செய்யப்பட்டதாக தெரிவித்தது.

மேலும், இந்த சிறிய சம்பவத்தினால் விமான நிலையத்தின் உள்கட்டமைப்பிற்கு எந்த சேதமும் இல்லை என்றும் கூறியுள்ளது.

இந்த நிலையில் சூட்கேஸின் உள்ளே ”புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கான தயாரிப்பு, குறைந்த அளவிலான கதிரியக்க தயாரிப்பு இருப்பினும் சேதத்துடன் இருப்பதாக EINacional தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கசிவு அபாயகரமானதா என்பதைக் கண்டறிய வல்லுநர்கள் இந்தத் தயாரிப்பு அடங்கிய சூட்கேஸை சரிபார்த்து வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *