வெறும் வயிற்றில் முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

முள்ளங்கி குறிப்பாக குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த காய்கறி. சில செரிமான நொதிகளை ஊக்குவிப்பதும், செரிமான செயல்முறையை துரிதப்படுத்துவதும் இதற்கு முக்கிய காரணம். மேலும், இது பித்த சாறு செயல்பாட்டையும் சீர்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் பசியின்மை, காய்ச்சல் மற்றும் தொண்டை வீக்கம் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. இது தவிர, இதில் உள்ள வைட்டமின் சி ஆரோக்கியத்திற்கான பல நன்மைகளை கொண்டுள்ளது. எனவே, காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

முள்ளங்கியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும். இதை உங்கள் தினசரி உணவில் சேர்த்து வர பின்வரும் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். முள்ளங்கியில் பல்வேறு வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. நார்சத்து, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் ஃபோலேட் போன்ற பல்வேறு வகையான தாதுக்கள் நல்ல அளவில் உள்ளது. முள்ளங்கியிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்திலிருந்து உடலை பாதுகாக்கிறது மற்றும் இளம் வயதிலேயே ஏற்படும் வயது முதிர்வையும் தடுக்கிறது. முள்ளங்கியில் நிறைந்துள்ள நீர்ச்சத்து உங்களை நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

மூல நோயை குணப்படுத்தும் முள்ளங்கி

முள்ளங்கியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் என்னும் மூல நோய் பிரச்சனை குறையும். முள்ளங்கியில் ராபினின் மற்றும் குளுக்கோசிலினேட்டுகள் போன்ற வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் கலவைகள் உள்ளன. இவை வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகின்றன. இது தவிர, அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைக்கிறது. இது தவிர மூல நோயால் ஏற்படும் அரிப்பு மற்றும் வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.

அமிலத்தன்மையை பிரச்சனையை தீர்க்கும் முள்ளங்கி

முள்ளங்கியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது அமிலத்தன்மையில் நன்மை பயக்கும். கருப்பு உப்பு சேர்த்து சாப்பிட்டால் போதும். நல்ல பலன் கிடைக்கும். இது வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை குளிர்விக்கும் நார்ச்சத்து போல செயல்படும். இதனுடன், காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கியை அதிகம் சாப்பிடக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பாதி சாப்பிட்டால் போதும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *