Rahu and Mercury: ராகு மற்றும் புதன் சேர்க்கை.. அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள்
புத்தாண்டு இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ளது. வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு எதிர்பார்த்து பன்னிரண்டு ராசிக்காரர்களும் காத்திருக்கின்றனர். பல கிரகங்களின் மாற்றம் இந்த புத்தாண்டில் நிகழ்ந்து வருகிறது. இந்த கிரகங்களின் மாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதேபோல வரக்கூடிய புத்தாண்டில் சில கிரகங்களின் சேர்க்கையும் நிகழ உள்ளன. நிழல் கிரகமாக விளங்கக்கூடிய ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். வரக்கூடிய 2024 ஆம் ஆண்டில் ராகுவும் புதனும் ஒன்றிணைந்து பயணிக்க உள்ளனர்.
மீன ராசிகள் பயணம் செய்யும் ராகுவோடு புதன் பகவான் இணைந்து பயணிக்கின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் அதன் தாக்கம் இருக்கும். இருப்பினும் மூன்று ராசிகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை காண போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
கும்ப ராசி
ராகு மற்றும் கேது உங்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்யப் போகின்றனர். சனி பகவான் உங்கள் ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த இரண்டு கிரகங்களால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. சில நேரத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கும். தொழில் ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். சொத்துக்கள் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகள் நல்ல வாய்ப்புகளை உண்டாக்கும். புதிய வருமானங்கள் உங்களைத் தேடி வரும்.
துலாம் ராசி
ராகு மற்றும் புதன் உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றனர். நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். நோயால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
ரிஷப ராசி
புதன் மற்றும் ராகு உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். இவர்களுடைய சேர்க்கை உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு உண்டாகும்.