ராகு கேது பெயர்ச்சி பலன்: 2024ல் பிசினஸ் ஆரம்பிக்கப்போறீங்களா?.. உங்க நேரம் எப்படி இருக்கு?
சென்னை: சர்ப்ப கிரகங்களான ராகு கேது மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர். கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்கிறார். கேது பகவான் ஞான காரகன். 2024ஆம் ஆண்டு முழுவதும் கன்னி ராசியில் பயணம் செய்யும் கேது சில ராசிக்காரர்களுக்கு படிப்பினைகளை தருவார். யாரெல்லாம் தொழில் வியாபாரம் ஆரம்பிக்க நினைக்கிறீர்களோ அவர்கள் சுய ஜாதகத்தை செக் செய்து கொள்வது நல்லது.
ராகு கேது: ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அந்த கிரகங்களின் பலனை செய்வார்கள். கன்னி ராசியில் தங்கியிருக்கும் ராகு புதன் போல செயல்படுவார்.
மேஷம்: மேஷம் ராசிக்கு ஆறாம் இடத்தில் பயணம் செய்யும் கேதுவினால் நன்மைகள் அதிகம் நடைபெறும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். கேது பகவான் எதிரிகளை துவம்சம் செய்து விடுவார். கடன் பிரச்னைகள் குறையும். பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள். பத்திரமான இடத்தில் பணத்தை சேமிப்பது நன்மை தரும். பொறுமையுடன் இருந்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும். செவ்வாய்கிழமைகளில் விநாயகரை வெற்றிலை மாலை சாற்றி வணங்குங்கள்.
ரிஷபம்: பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ள கேது பல நன்மைகளை செய்யப் போகிறார். கேதுவினால் எல்லா விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறைக் காட்டுங்கள். வயிறு பிரச்சினை வரலாம் நேரத்திற்கு சரியான உணவை சாப்பிடுங்கள். மனதில் நினைத்ததை செயல்படுத்துவதில் வேகம் காட்டுவீர்கள். மனதில் நற்சிந்தனைகளையும், நல்லெண்ணங்களையும் கேது அருள்வார். தொழில் தொடங்க நினைக்கும் முன் குல தெய்வ வழிபாடு அவசியம்.
மிதுனம்: நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்யும் கேது பகவானால் உங்களுடைய வாழ்க்கை தரம் உயர்வடையும். வேலையில் முன்னேற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். நீங்கள் எடுக்க போகும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சொத்து, சுகத்தை கொடுப்பார் கேது. லாப குருவினால் உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் பல மடங்கு பணம் வரும். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலில் விளக்கேற்றி வழிபடுங்கள்.