ராகு, கேது யோகம்.., அதிஷ்டத்தை அள்ளப்போகும் 4 ராசியினர்
சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர்.
நவகிரகங்களில் அசுப கிரகங்களாக ராகு கேது விளங்கி வருகின்றனர். இவர்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் நுழைந்தனர்.
இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்கின்றனர்.
இவர்களின் இந்த இடமாற்றம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிஷ்டத்தை அளிக்கப்போகிறது.
மேஷம்
பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
மற்றவர்களிடத்தில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும்.
ரிஷபம்
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
புதிய முயற்சிகள் கைகூடும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
ராகு வழிபாடு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
மிதுனம்
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும்.
பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது.
கடன் சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும்.
துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும்.
கடகம்
மறைமுகமாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும்.
திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.
வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
புதிய பொறுப்புகள் தேடி வரும்.
பண வரவில் எந்த குறையும் இருக்காது.
முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அனைத்தும் தேடி வரும்.
காலபைரவரை வழிபட்டால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.