ராகு பெயர்ச்சி… 2025 மே மாதம் வரை ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல், பிரச்சனை!

ஜோதிடத்தில் ராகு கிரகம் நிழல் கிரகமாக கருதப்படுகிறது. ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டுள்ள ராகு கிரகம், மெதுவாக நகரும் கிரகங்களில் ஒன்று. ராகு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற 18 மாதங்களை எடுத்துக் கொள்கிறது. இந்நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 30ஆம் தேதி அன்று ராகு கிரகம் மீனத்தில் நுழைந்தார். 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை, மீன ராசியில் ராகு கிரகம் (Rahu Transit Effects) தங்கி இருப்பார்.

கும்ப ராசிக்கு செல்லும் ராகு

அடுத்த வருடம் மே மாதம் தான், மீனத்தில் இருந்து ராகு கும்ப ராசிக்கும் நுழைவார். ராகு கிரகம் எப்போதுமே வக்ர நிலையில் பயிற்சி செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. மீனத்தில் ராகு பகவான் வீற்றிருக்கும் நிலையில், 2025 ஆம் ஆண்டு வரை, வாழ்க்கையில் சிக்கல்களை சந்திக்கும் சில ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசிக்கான ராகு பெயர்ச்சி பலன்கள்

மேஷ ராசிக்கு (Aries Zodiac Sign) ராகு பெயர்ச்சி சாதகமாக இருக்காது. வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். செலவுகள் அதிகரிப்பதால் நிதி நெருக்கடியை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. எந்த ஒரு முடிவையும் எடுக்கும், வீர ஆலோசித்து முடிவு செய்யவும். இல்லை என்றால் பாதகமான விளைவு ஏற்படும். குடும்பத்தில் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே, நிலையில் சற்று கவனம் தேவை. நாள்பட்ட நோய்கள் இருந்தால் கூடுதல் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். சொத்து வீடு விற்கும் வாங்கும் யோசனை இருந்தால், அதனை சிறிது ஒத்தி போடவும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கன்னி ராசிக்கான ராகு பெயர்ச்சி பலன்கள்

கன்னி ராசியின் (Virgo Zodiac Sign) ஏழாவது வீட்டில் ராகுல் பெயர்ச்சி ஆகியுள்ள நிலையில், இதன் தாக்கம் காரணமாக, உறவினர்கள் நண்பர்களுடன் தகராறு ஏற்படும் வாய்ப்பு உண்டு. இதனால் மன அழுத்தத்தை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே உங்கள் பேச்சில் கவனம் தேவை. நிதி இழப்பை சந்திக்க நேரிடலாம். வேலையில் தடைகள் வரலாம். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கும். எனினும் குரு பகவானின் அருள் காரணமாக, வேலை மற்றும் தொழில் பெரிய தாக்கம் எதுவும் இருக்காது.

தனுசு ராசிக்கான ராகு பெயர்ச்சி பலன்கள்

தனுசு ராசிக்காரர்கள், (Sagitarrius Zodiac Sign) வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கும். சுகபோகங்கள், ஆடம்பர வசதிகள் குறைய வாய்ப்புண்டு. குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும். உங்கள் கோப உணர்வை கட்டுப்படுத்துவதால் பல பிரச்சினைகளை குறைக்கலாம். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் அதிகரிக்கலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நிம்மதி தொலையலாம். வேலையில் இருப்பவர்களும் மனிதர்களும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *