Rahul Ravi: தலைமறைவான “நந்தினி” சீரியல் நடிகர்.. பரபரப்பு கிளப்பிய புகார்.. ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்
பல பெண்களுடன் உறவில் இருப்பதாக சின்னத்திரை நடிகர் மீது அவரது மனைவி அளித்த புகாரில் நடிகருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சீரியல் வட்டாரத்தில் பிரபலமானவராகவும், வெள்ளித்திரை வட்டாரத்தில் துணை நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் ராகுல் ரவி (Rahul Ravi). கேரளாவைச் சேர்ந்தவரான இவர், ‘பொன்னம்பளி’ என்ற மலையாள சீரியலின் மூலம் எண்ட்ரி தந்தார்.
தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல் உலகில் ராகுல் ரவி எண்ட்ரி தந்த நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியலான ‘நந்தினி’ மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு லட்சுமி நாயர் என்பவரை காதல் திருமணம் செய்த ராகுல் ரவி, தொடர்ந்து தன் மனைவியுடன் இன்ஸ்டாவில் வீடியோக்கள் பகிர்ந்து ரசிகர்களைப் பெற்றார்.
ஆனால், 2 ஆண்டுகள் கழித்து இவர்களது உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், முன்னதாக ராகுல் ரவி மீது லட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன் கணவர் பல பெண்களுடன் உறவில் இருப்பதாகவும், இது குறித்த கேள்வி கேட்டபோது தன்னை ராகுல் தாக்கியதாகவும் லட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ராகுல் ரவி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், ராகுல் ரவி முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் தலைமறைவான ராகுல் ரவியின் முன் ஜாமீன் மனுவை ரத்து செய்த நீதிமன்றம், அவரைக் கண்டறிய லுக் அவுட் நோட்டீஸூம் வெளியிட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி ராகுல் ரவி விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.