சென்னை ரியல் எஸ்டேட்-க்கு ராஜ யோகம்.. முதலீட்டாளர் மாநாட்டில் குவிந்த ரூ.20000 கோடி..!!
இந்தியாவில் வேகமாக வளரும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வரும் வேளையில் புதிய முதலீடுகள் தொடர்ந்து குவிந்து வருகிறது.
இதனால் ஹவுசிங் மற்றும் கமர்சியல் ரியல் எஸ்டேட் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது, இதை உணர்ந்த பல முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரும் முதலீட்டை செய்வதாக அறிவத்துள்ளது. இதில் முக்கியமாக தென்னிந்திய ரியல் எஸ்டேட் துறையில் பிரபலமான பிரிகேட் குரூப் அடுத்த 3-4 ஆண்டுகளில் 25,000 பேருக்கு வேலை வாய்ப்புகளுடன் சென்னையில் உயர்ந்த குடியிருப்பு மற்றும் வணிக திட்டங்களுக்காக தமிழ்நாட்டில் சுமார் 3,400 கோடி ரூபாய் முதலீடுகளை செய்ய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. பிரிகேட் குரூப் உடன் சேர்த்து Brigade, Prestige, Navins ,Landmark,Ramaniyam, Kochar,Lancar holdings ஆகியவை இணைந்து சுமார் 20000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை சென்னையில் மட்டுமே அறிவித்துள்ளது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் பல பெரிய ஹவுசிங் மற்றும் கமர்சியல் ரியல் எஸ்டேட் கட்டுமானங்கள் துவக்கப்படும். இந்த முதலீட்டின் வாயிலாக தமிழ்நாட்டுக்கு குறிப்பாக சென்னைக்கு வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான அலுவலக தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும். 2023ல் அதிகப்படியான அலுவலக இடங்களுக்கான குத்தகை ஒப்பந்தம் சென்னையில் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், இந்த 2 நாள் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சுமார் 5.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுகள் வரும் என கணிக்கப்பட்ட நிலையில் கணிப்புகளை உடைத்து ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான முதலீட்டு விருப்பங்களைப் பெறப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த முதலீட்டில் பெரும்பாலானவே ஏற்கனவே தமிழ்நாட்டில் இருக்கும் நிறுவனங்களின் முதலீட்டு அறிவிப்பாக இருக்கும் காரணத்தால் மொத்த முதலீட்டில் பெரும் பகுதி உறுதியாக வரும் சாதகமான சூழ்நிலை உள்ளது. இதுதான் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின் வெற்றியாக பார்க்க வேண்டிய ஓன்று.