ரஜத் பட்டிதர் vs சர்ஃபராஸ் கான்.. இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு? பேட்டிங் பயிற்சியாளர் சூசகம்!
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், அனுபவ வீரர்களான கேஎல் ராகுல், ஜடேஜா உள்ளிட்ட இருவரும் காயம் காரணமாக விலகியுள்ளனர். ஏற்கனவே விராட் கோலி விலகிய நிலையில், தற்போது 2 நட்சத்திர வீரர்கள் விலகி இருப்பது இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அனுபவமற்ற வீரர்களால் ஏற்கனவே இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருக்கும் சூழலில், அறிமுக வீரர்களை சேர்க்க வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. இதனால் கேஎல் ராகுல் இடத்தில் எந்த வீரர் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி உள்ளது. இதற்காக இந்திய அணியின் ரஜத் பட்டிதர் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகிய இருவரும் போட்டியில் உள்ளனர்.
ரஜத் பட்டிதர் டாப் ஆர்டர் வீரர் என்பதோடு, கடந்த சில மாதங்களாக அசத்தலான பேட்டிங் ஃபார்மில் உள்ளார். இதன் காரணமாகவே தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் ரஜத் பட்டிதர் அறிமுகம் செய்யப்பட்டார். இன்னொரு பக்கம் மிடில் ஆர்டர் வீரரான சர்ஃபராஸ் கான் முதல்தர கிரிக்கெட்டில் ஆயிரக்கணக்கான ரன்களை அசத்தலாக விளாசி தேர்வு குழுவை தன் பக்கம் திருப்பியுள்ளார்.
இதுகுறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் பேசுகையில், விசாகப்பட்டினம் பிட்சை கணிப்பது கொஞ்சம் கடினமானது. நிச்சயம் டர்ன் இருக்கும், ஆனால் முதல் நாளில் இருந்தே டர்ன் இருக்குமா என்பது சந்தேகம் தான். அப்படிதான் பிட்ச் அமைக்கப்படும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் விசாகப்பட்டினம் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்துள்ளது.
தொடர்ந்து விக்ரம் ரத்தோர் பேசுகையில், சர்ஃபராஸ் கான் மற்றும் ரஜத் பட்டிதர் இருவரில் யார் பிளேயிங் லெவனில் இருப்பார்கள் என்று சொல்வது கடினம் தான்.