Rajini on Vishal: “விஜய் வரிசையில் விஷாலின் முதலமைச்சர் கனவு..” ரஜினி கொடுத்த அந்த ரியாக்‌ஷன்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் நேற்று வெளியானது. இந்தப் படத்துக்கு எதிர்பார்த்தளவு வரவேற்பு கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், விஜய்யை தொடர்ந்து விஷாலும் அரசியல் கட்சித் தொடங்கியுள்ளது பற்றி ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ரஜினி கொடுத்த ரியாக்‌ஷன் வைரலாகி வருகிறது.

விஷாலின் முதல்வர் கனவுக்கு ரஜினியின் ரியாக்‌ஷன்

கடந்த சில தினங்களாகவே தமிழ்த் திரையுலகில் இருந்து படங்களின் அப்டேட்டை விட, அரசியல் பற்றிய செய்திகள் தான் அதிகம் வருகின்றன. கடந்த வாரம் தனது அரசியல் கட்சியை அறிவித்தார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், இனி சினிமாவில் இருந்து விலகி அரசியலில் பயணிக்கப் போவதாக அறிவித்தார். விஜய்யின் இந்த முடிவுக்கு வாழ்த்துகளும் விமர்சனங்களும் மாறி மாறி வந்தன.

விஜய்யின் அரசியல் கட்சி பரபரப்பு அடங்கும் முன்பே விஷாலும் ஒரு அணுகுண்டை கொளுத்திப் போட்டார். அதாவது தானும் அரசியலில் களமிறங்குவதாக அறிவித்த விஷால், “எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது கிடையாது. ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்ற வள்ளுவனின் வாக்குப்படி, என்னால் முடிந்த உதவிகளை செய்துக்கொண்டே இருப்பேன். அது எனது கடமை என்று மனரீதியாக கருதுகிறேன்” எனக் கூறியிருந்தார்.

மேலும் தனது அறிக்கையில், “சமூகத்தில் என்னை இத்தனை ஆண்டுகளாக நடிகனாகவும் சமூக சேவகனாகவும் உங்களில் ஒருவனாகவும் அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், “இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு” என குறிப்பிட்டு தனது அரசியல் கட்சியின் பெயர் மக்கள் நல இயக்கம் என அறிவித்தார்.

இதனிடையே விஜய்யின் அரசியல் வருகை குறித்து ரஜினியிடம் கேட்கப்பட்டதற்கு ‘வாழ்த்துகள்’ எனக் கூறியிருந்தார். இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை போனில் அழைத்து விஜய் நன்றி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அதோடு 15 நிமிடங்கள் வரை இருவரும் கலந்துரையாடியவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இன்று விஷால் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *