ரசிகர்களை சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினி…

தமிழ் திரையுலகின் மூத்த நடிகராகவும், 73 வயதை கடந்தும் பாக்ஸ் ஆபிஸ் அரசனாகவும் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 40 ஆண்டுகளை கடந்து தொடரும் ரஜினிகாந்தின் திரையுலக பயணம், வெற்றிமேல் பல வெற்றிகளை தொடர்ந்து குவிந்ததால், அவருக்கென ரசிகர் பட்டாளம் உருவானது. எம்.ஜி.ஆர்-க்கு பின்னர் கடல்கடந்து பல திரைப்படங்களை கொண்டு சேர்த்து ரஜினிகாந்தின் படங்கள் மட்டுமே. விரைவில் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள லால் ஸலாம், வேட்டையன் படங்கள் வெளியாகவுள்ளன.
இந்நிலையில், இன்று புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டிற்கு முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை பதிவு செய்தார். இதுதொடர்பான காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.