ரஜினிகாந்த் to ராம் சரண்- ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் தென்னிந்திய பிரபலங்கள்!

அயோத்தியில் உள்ள சரயு நதிக்கு அருகே கட்டப்பட்டுள்ள இந்த கோயில், பிரம்மாண்டமான அளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுக்கப்பட்ட நடிகர்களும் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர். அப்படி இவ்விழாவில் கலந்து கொள்ள இருப்பவர்கள் யார் யார் தெரியுமா?
ரஜினிகாந்த்:
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவரக வலம் வருபவர், ரஜினிகாந்த். இவர், சினிமா உலகில் மட்டுமன்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே செய்து வருகிறார். இவர், ஆன்மிக பயணத்தையும் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறார். தனது பிறந்தநாள், நல்ல நாள், வருடத்தில் சில நாள் என இமாலயத்திற்கு பயணம் மேற்கொள்வார். இதையடுத்து, நாளை நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னையில் இருந்து கிளம்பியுள்ளார்.
மோகன் லால்:
மலையாள ஸ்டார் நடிகர் மோகன் லாலிற்கும் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவரது ‘மலைக்கோட்டை வாலிபன்’திரைப்படம், வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரமோஷன் விழாக்களில் மோகன் லால் கலந்து கொண்டு வருகிறார். பிசியாக இருக்கும் இவர், ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு செல்வாரா இல்லையா என்பது சந்தேகம்தான் என கூறப்படுகிறது. இருப்பினும், தலைமையில் இருந்து அழைப்பு வந்துள்ளதால், கண்டிப்பாக செல்வார் என்றும் கூறப்படுகிறது.