Rakul Preet singh: நாள் குறிச்சாச்சு..ரகுல் ப்ரீத் சிங்குக்கு விரைவில் டும் டும்.. மணமகன் யாா் தெரியுமா?

நடிகை ரகுல் ப்ரீத் சிங் இல்லற வாழ்க்கைக்கு தயாராகி வருகிறார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

நடிகா், நடிகைகள் பலா் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனா். தற்போது புத்தாண்டு நற்செய்தியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் இல்லற வாழ்க்கைக்கு தயாராகி வருகிறார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்த ‘தடையற தாக்க’ படத்தின் மூலம் அறிமுகமானவா் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தொடா்ந்து கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தாா். ‘யுவன்’, ‘என்னமோ ஏதோ’, ‘என்ஜிகே’ உள்ளிட்ட படங்களிலும் அவர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளாா்.

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’, சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’ படங்களிலும் நடித்துள்ளாா் ரகுல் ப்ரீத் சிங். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து முன்னணி நாயகியாக தற்போது வளம் வருகிறாா்.

‘அயலான்’ படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக தயாராகி இருக்கும் சூழலில், நடிகை ரகுல் ப்ரீத் சிங், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக ரகுலும், ஜாக்கி பக்னானியும் ரிலேஷன்ஷிப்பில் இருந்த வந்த நிலையில், தற்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்களாம். இவர்கள் இருவருக்கும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி கோவாவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜாக்கி பக்னானி தமிழில் த்ரிஷாவின் ‘மோகினி’ படத்தில் நடித்துள்ளார். இவர் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி பக்னானி ஜோடிக்கு ரசிகர்கள் தற்போதே தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது ஜாக்கியும், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாட தாய்லாந்து சென்றிருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *