ராமர் கோவில்: 15 மாநிலத்தில் ‘Dry Day’, கோவா-வில் கசினோ மூடல்..!
அ யோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல மாநிலங்களில் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது, ஏன் பல்லாயிரம் கோடி ரூபாய் வர்த்தகமாகும் பங்குச்சந்தை கூட ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக மூடப்பட்டு உள்ளது முதல் பல பிரபலங்கள் கலந்துகொள்வதால் ஒட்டுமொத்த நகரமும் உச்சக்கட்ட பாதுகாப்பில் உள்ளது.
இந்த நிலையில் டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, திரிபுரா, கோவா, ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், சண்டிகர், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உலர் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுபானம், இறைச்சி, மீன் விற்பனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவிலில் ‘பிரான் பிரதிஷ்டை’ விழாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில், கோவாவில் உள்ள அனைத்து சூதாட்ட விடுதிகளும் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் எட்டு மணி வரை மூடப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை கேசினோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.கோவாவில் ஆறு கடலோர சூதாட்ட விடுதி நிர்வாகம் ஒரு கடல் மீது இருக்கும் கேசினோ ஆகிய அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் 4 மணி வரை மூடப்பட உள்ளது. இதன் மூலம் மாநில தலைநகரான பனாஜிக்கு அருகில் உள்ள மாண்டோவி ஆற்றில் சூதாட்ட கப்பல்கள் நங்கூரமிட்டு உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவா அரசு அனைத்து அரசு, அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராம் கோவிலின்’பிரான் பிரதிஷ்டை’ திங்கள்கிழமை மதியம் 12.30 மணிக்கு தொடங்க உள்ளது.அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை சிலை 51 அங்குல உயரமும் 1.5 டன் எடையும் கொண்டது. ஒரே கல்லில் இருந்து தாமரையின் மீது ஐந்து வயது குழந்தையாக ராமர் நிற்பது போல் இந்தச் சிலை உள்ளது.