இன்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழா : விழாவில் பங்கேற்கிறார் நித்யானந்தா?
இன்று நடக்கவிருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கவுள்ளதாக சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதாக கூறியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் நித்யானந்தா கூறியிருப்பதாவது:- “அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியை தவறவிடாதீர்கள் . ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு பாரம்பரிய முறைப்படி அழைக்கப்படுகிறார். அவர் ஒட்டு மொத்த உலகிற்கும் ஆசி வழங்க இருக்கிறார்.”முறையாக அழைக்கப்பட்டதன் பேரில், இந்து மதத்தின் பகவான், ஸ்ரீ நித்யானந்தா இந்த பிரமான்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்” என்று பதிவிட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நித்தியானந்தா, தற்போது கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி வருகிறார். இந்த நிலையில் தான் நித்யானந்தா இன்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க இருப்பதாக கூறியிருக்கிறார்.