ராமர் கோயில் கும்பாபிஷேக விழா: 4 ஆயிரம் சாதுக்களுக்கு அழைப்பு
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷே விழாவில் பங்கேற்க நாடு முழுதும் 4 ஆயிரம் சாதுக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உ..பி.
மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.. இதனை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கண்காணித்து வருகிறது. அடுத்தாண்டு (2024) ஜன., 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
இதையொட்டி நாடு முழுதும் அனைத்து பிரிவைச் சேர்ந்த 4 ஆயிரம் சாதுக்கள், சங்கராச்சாரியர்கள், சீக்கிய, பெளத்த மத பிரதிநிதிகள், வாழும் கலை அமைப்பினர், வாமினி நாரயணன் அமைப்பினர், பத்திரிகையாளர்கள், பல்வேறு துறை பிரபலங்கள் உள்ளிட்டோருக்கும் ஸ்ரீராம ஜென்பூமி தீர்த்த ஷே த்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மெகா ஊதுபத்திகும்பாபிஷேக விழாவில் வைப்பதற்காக குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் 108 அடி நீள ஊதுபத்தி தயார் செய்யப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அயோத்தி கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.