நெருங்கும் ராமர் கோவில் திறப்பு விழா.. அயோத்தியில் வீடு கட்ட நிலம் வாங்கிய அமிதாப்பச்சன் – விலை என்ன தெரியுமா?
பாலிவுட் உலகின் முன்னணி நட்சத்திரமான அமிதாப் பச்சன், அயோத்தியில் உள்ள சரயு என்ற, 7 நட்சத்திர கலப்பு பயன்பாட்டு என்கிளேவில் (குடியிருப்பில்) மும்பையை சேர்ந்த டெவலப்பர் அபிநந்தன் லோதாவின் ப்ரொஜெக்ட்டில் ஒரு வீட்டை வாங்கியுள்ளார் என்ற தகவல் இப்பொது வெளியாகியுள்ளது. HoABL (The House of Abhinandan Lodha) என்பது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய Branded Land Developerகளில் ஒன்றாகும்.
இந்நிலையில் அந்த ஒப்பந்தத்தின் அளவு (நிலத்தில் அளவு) மற்றும் மதிப்பு குறித்து கருத்து தெரிவிக்க ஹோப்ல் மறுத்தாலும், ரியல் எஸ்டேட் துறை வட்டாரங்கள் கூறுகையில், அமிதாப்பச்சன் சுமார் 10,000 சதுர அடியில் 14.5 கோடி செலவில் அந்த வீட்டை வங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.
பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் ஸ்ரீராம ஜென்மபூமி கோவிலை திறந்து வைக்கும் நாளான ஜனவரி 22-ம் தேதி முறைப்படி தொடங்கப்பட உள்ளது இந்த சரயு. சுமார் 51 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது இந்த புதிய கட்டமைப்பு. அயோத்தியில் சரயுவுக்காக அபிநந்தனா லோதாவின் வீடு, என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது என்றார் அமிதாப்பச்சன்.
அயோத்தியின் காலத்தால் அழியாத ஆன்மீகம் மற்றும் கலாச்சார செழுமை ஆகியவை புவியியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வுபூர்வமான தொடர்பை உருவாக்கியுள்ளன. இது அயோத்தியின் ஆன்மாவுக்கான இதயப்பூர்வமான பயணத்தின் தொடக்கமாகும், பாரம்பரியமும் நவீனமும் தடையின்றி இணைந்து, என்னுள் ஆழமாக எதிரொலிக்கும் ஒரு உணர்ச்சித் திரையை உருவாக்கியது என்றார் அமிதாப்பச்சன். உலகின் ஆன்மீக தலைநகரில் எனது வீட்டை வாங்க ஆவலுடன் உள்ளேன் என்றும் அவர் கூறினார்.
நடிகர் அமிதாப் பச்சன் பிறந்த இடமான அலகாபாத், அயோத்தியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 330 வழியாக 4 மணிநேர பயண தூரத்தில் உள்ளது. இது அவரது நிறுவனத்திற்கு ஒரு மைல்கல் தருணம் என்று கூறிய அபிநந்தன் லோதா, பச்சனை தங்கள் Sarayuவின் முதல் குடிமகனாக பச்சனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.
ராமர் கோவிலில் இருந்து சுமார் 15 நிமிட தூரத்திலும், அயோத்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 30 நிமிட தூரத்திலும் அமைந்திருக்கும் இந்த Sarayu திட்டத்தில் அவர் முதலீடு செய்திருப்பது, நகரங்களின் பொருளாதார ஆற்றலையும், ஆன்மீக பாரம்பரியத்தின் மீதான ஆழ்ந்த மதிப்பையும் பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். அமிதாப் பச்சனின் வருகையால் இந்த திட்டம் அயோத்தியின் உலகளாவிய ஆன்மீக முக்கியத்துவத்தின் அடையாளமாக மாற்றும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்த ப்ரொஜெக்ட்டில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமிதாப் பச்சனின் முதலீடு இந்த என்கிளேவின் திட்டமிடப்பட்ட மேம்பாட்டில் உள்ளது என்றும் அவர் கூறினார். அந்த நட்சத்திர ஹோட்டல் பிரபல ப்ரூக்ஃபீல்ட் குழுமத்துடன் இணைந்துள்ள லீலா பேலஸ் ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகளின் கீழ் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மார்ச் 2028க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் அயோத்தி பாபர் மசூதி இந்துக்களுக்கு சொந்தமானது என்ற அந்த இடத்தின் தீர்ப்பை வழங்கியதில் இருந்து அயோத்தி நகருக்குள் மற்றும் அதன் புறநகரில் உள்ள லக்னோ மற்றும் கோரக்பூரை சுற்றியுள்ள நிலத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.
அனாராக் குழுமத்தின் தலைவர் அனுஜ் பூரி வெளியிட்ட கருத்தில், பாபர் மசூதி தீர்ப்பு வந்த உடனேயே அயோத்யா நகரத்தில் நிலத்தின் விலைகள் கிட்டத்தட்ட 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்தன என்றார். அயோத்தியின் புறநகரில் சராசரி நிலத்தின் விலை சதுர அடிக்கு 1500 ரூபாய் முதல் சதுர அடிக்கு 3000 வரை உயர்ந்துள்ளது. அதே போல நகரத்திற்குள் நிலத்தின் விலை சதுர அடிக்கு 4000 ரூபாய் முதல் சதுர அடிக்கு 6000 வரை உயர்ந்துள்ளது என்றார் அவர்.
2021ல் தொடங்கப்பட்ட HoBAL, வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதன் மூலம் நிலம் வாங்கும் அனுபவத்தை மாற்றியமைத்த பெருமைக்குரியது, அதே நேரத்தில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகில் எங்கும் நிலம் வாங்குவதை சாத்தியமாக்கியுள்ளது. எங்கள் கடைசி திட்டத்தில் 19 நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இருந்தனர் என்று மகாராஷ்டிர சுற்றுலாத் துறை அமைச்சர் மங்கள் பிரபாத் லோதாவின் இளைய மகன் லோதா கூறினார். 2000 கோடி முதலீட்டில் பெனாரஸ், விருந்தாவன், சிம்லா மற்றும் அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் நான்கு சொகுசு ஹோட்டல்களையும் hoBal உருவாகும் என்று அவர் தெரிவித்தார்.