அயோத்தியில் கண் திறந்தார் ராமர்… சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்!
அ யோத்தி ராமர் கோவிலின் பிரம்மாண்ட கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்று வரும் நிலையில், மதியம் சரியாக 12:30:35 மணிக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான சடங்குகளை செய்து முடித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, ராமர் பிராணஷ்டைக்காக கடந்த 11 நாட்களாக விரதம் இருந்து வந்தார். மேலும் நாட்டில் உள்ள முக்கிய தலங்களுக்கும் சென்று வழிபாடு செய்தார்.
நாடு முழுவதுமிருந்தும் பிரபல கலைஞர்கள் பங்கேற்று தமிழக பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாகஸ்வரம், மிருதங்கம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை இசைத்தனர்.