கண்களை மூடித் திறக்கும் ராமர்: சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ
ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராம ஜென்மபூமி ஆலயத்தில் ராமர் பிராண பிரதிஷ்டை விழா நடைபெற்றது. ராம் ஜென்மபூமி அறக்கட்டளை விடுத்த அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடிபங்கேற்றார்.
உச்சநீதிமன்றத்தின் முடிவைத் தொடர்ந்து, அயோத்தியாவில் பாரம்பரிய நாகரா பாணியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் (கிழக்கு-மேற்கு) 380 அடி; அகலம் 250 அடி, உயரம் 161 அடி; மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 கதவுகளைக் கொண்டது. கோயிலின் தூண்கள் மற்றும் சுவர்கள் இந்து தெய்வங்கள், கடவுள்களின் சிற்ப சித்தரிப்புகளை வெளிப்படுத்துகின்றன. தரை தளத்தில் உள்ள பிரதானக் கருவறையில், ராமரின் குழந்தைப் பருவ வடிவம் (குழந்தை ராமரின் சிலை) வைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் பிரதான நுழைவாயில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, இதை சிங் துவார் வழியாக 32 படிக்கட்டுகள் ஏறுவதன் மூலம் காணலாம். இந்தக் கோவிலில் நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரதான மண்டபம், கீர்த்தனை மண்டபம் என மொத்தம் ஐந்து மண்டபங்கள் உள்ளன. கோயிலுக்கு அருகில் ஒரு வரலாற்றுக் கிணறு (சீதா கூப்) உள்ளது. இது பண்டைய சகாப்தத்திற்கு முந்தையது. கோயில் வளாகத்தின் தென்மேற்குப் பகுதியில், குபேர திலாவில், சிவனின் பண்டைய கோயில் மீட்டெடுக்கப்பட்டு, ஜடாயுவின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
கோயிலின் அடித்தளம் 14 மீட்டர் தடிமன் கொண்ட ரோலர்-காம்பாக்ட் கான்கிரீட் (ஆர்.சி.சி) அடுக்குடன் கட்டப்பட்டுள்ளது. இது செயற்கைப் பாறையின் தோற்றத்தை அளிக்கிறது. கோயிலில் எங்கும் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. நிலத்தின் ஈரப்பதத்தில் இருந்து பாதுகாக்க, கிரானைட் கற்களால் 21 அடி உயர பீடம் கட்டப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் சுத்திகரிப்பு ஆலை, தீ தடுப்புக்கான நீர் வழங்கல் மற்றும் ஒரு சுயேச்சையான மின் நிலையம் உள்ளது. நாட்டின் பாரம்பரிய, உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.
https://twitter.com/happymi_/status/1749466231785324847
கண்களை முடித் திறக்கும் ராமர்:
இந்நிலையில், குழந்தைப் பருவ வடிவத்தில் உள்ள ராமர் தனது கண்களை மிக விரைவாகக் மூடித் திறப்பது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு உண்மை போல் இருக்கும் இது, செயற்கை நுண்ணறிவு/ இயந்திரக் கற்றல் (Artificial Intelligence/ maching Learning) போன்ற தொழிற்நுட்பங்கள் மூலம் போலியாக முகமாற்றம் செய்யப்பட்டதாகும் . இருப்பினும், இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.