பெட்ரோல் & டீசல் ஆப்ஷனுடன் இந்தியாவில் களமிறங்கிய ரேஞ்ச் ரோவர் எவோக்… விலை மற்றும் சிறப்பம்சங்கள்..
பிரபல சொகுசு கார் நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) அதன் ரேஞ்ச் ரோவர் எவோக்கின் (Range Rover Evoque) அப்டேட்டட் மாடலை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. 2024 ரேஞ்ச் ரோவர் எவோக்கின் துவக்க எக்ஸ்ஷோரூம் விலை ரூ.67.9 லட்சமாக இருக்கிறது.
இந்த ஆடம்பர எஸ்யூவி-யின் 2024 மாடலானது அப்டேட் செய்யப்பட்ட டிசைனையும், 2 எஞ்சின் விருப்பங்களுடன் புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த கார் குறித்து கூறி இருக்கும் JLR லேட்டஸ்ட் டெக்னலாஜிக்கள் மற்றும் காஸ்டலியான மெட்டீரியல்களை உள்ளடக்கிய நேர்த்தியான வடிவமைப்பை இது கொண்டிருப்பதாக தெரிவித்தது.
பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும் இந்த 2024 Evoque மாடலானது Dynamic SE ட்ரிம்மில் மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் 2 பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் என்று பார்த்தால் அதில் ஒன்றான 2.0லி பெட்ரோல் எஞ்சின் 247bhp பவரையும், 365Nm பீக் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. அதே நேரம் 2.0லி இன்ஜினியம் டீசல் இன்ஜின் 201bhp பவரையும், 430Nm பீக் டார்க்கையும் வழங்குகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 2024 ரேஞ்ச் ரோவர் எவோக் காரானது BMW X3, Mercedes Benz GLC மற்றும் Audi Q5 போன்ற சொகுசு SUV-க்களுக்கு போட்டியாக தொடர்கிறது.
2024 ரேஞ்ச் ரோவர் EVOQUE-ன் டிசைன்: டிசைனை பொறுத்தவரை 2024 எவோக்கானது ஒரு ஸ்லீப் கூப் (sleek coupe) போன்ற silhouette, ஃப்ளோட்டிங் ரூஃப், புதிதாக டிசைன் செய்யப்பட்ட ஃப்ரன்ட் கிரில், சிக்னேச்சர் DRLs கொண்ட புதிய LED ஹெட்லேம்ப்ஸ், ரெட் பிரேக் காலிப்பர்ஸ் மற்றும் டயமன்ட்-கட் அலாய் வீல்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் புதிய டே-டைம் ரன்னிங் லைட் கிராபிக்ஸ் கொண்ட சூப்பர்-ஸ்லிம் ஹெட்லேம்ப்ஸ் காரின் கவர்ச்சியை அதிகரிக்கின்றன. கூடுதலாக, இது Corinthian Bronze மற்றும் Tribeca Blue என 2 புதிய எக்ஸ்டீரியர் கலர் ஆப்ஷன்களை பெறுகிறது.
2024 ரேஞ்ச் ரோவர் EVOQUE-ன் அம்சங்கள்: இந்த அப்டேட்டட் கார் ஒரு க்ளீன் சென்டர் கன்சோல் டிசைன் மற்றும் ஒரு புதிய கியர் ஷிஃப்டர் என மாற்றங்கள் செய்யப்பட்ட இன்டீரியரை கொண்டுள்ளது. மேலும் இந்த காரில் சமீபத்திய தலைமுறை பிவி புரோ தொழில்நுட்பத்துடன் கூடிய 11.4-இன்ச் கர்வ்ட் கிளாஸ் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இது அத்தியாவசிய வாகன செயல்பாடுகளை தடையின்றி கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.
மேலும், ஸ்டாண்டர்ட் வயர்லெஸ் டிவைஸ் சார்ஜிங் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்டோவேஜ் ஸ்பேஸ் ஆகியவை இன்டீரியர் கேபினின் கவர்ச்சியை மேலும் அதிகமாக்குகிறது. மேலும் பனோரமிக் சன்ரூஃப், டூயல்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் ஃப்ரன்ட் சீட்ஸ் , வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 360 டிகிரி கேமரா, ஏர் ஃபில்டர் மற்றும் கனெக்டட் கார் அம்சங்கள், ஆட்டோ ஹைபீம் அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் லெவலிங், ஃப்ரன்ட் ஃபாக் லைட்ஸ் போன்றவையும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த சொகுசு SUV ஆனது Eco, Comfort, Grass-Gravel-Snow, Mud-Ruts, Sand, Dynamic மற்றும் Automatic ஆகிய டிரைவிங் மோட்ஸ்களை கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களில் மல்ட்டி ஏர்பேக்ஸ் மற்றும் ஏபிஎஸ் உடன் ஈபிடி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.
பவர் ட்ரெயின்: ரேஞ்ச் ரோவர் எவோக் மேம்பட்ட மைல்ட்-ஹைப்ரிட் எலக்ட்ரிக் (MHEV) பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களைக் கொண்டுள்ளது. இது செயல்திறனை மேம்படுத்துகிறது. BiSG டெக்னலாஜியானது பிரேக்கிங் மற்றும் வேகத்தை குறைக்கும் போது ஆற்றலைப் பயன்படுத்துகிறது, இது 48 V லித்தியம் அயன் பேட்டரியில் எரிபொருளைச் சேமிக்கும் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டத்தின் சீரான செயல்பாட்டிற்காக சேமிக்கப்படுகிறது.