ரஞ்சி கோப்பை – இதுல்லாம் ஒரு பேட்டிங்கா? மும்பை அணியை வெளுத்து வாங்கிய சச்சின் டெண்டுல்கர்
ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் விதர்பா அணியும், மும்பை அணியும் பலப் பரிட்சை நடத்தி வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் மும்பை அணி வீரர்கள் மோசமாக ஆடியது ரசிகர்களை மட்டுமல்லாமல் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரையும் கோபப்படுத்தியிருக்கிறது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் ரகானே, ஸ்ரேயாஸ் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க மும்பை அணி 111 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனை அடுத்து சர்துல் தாக்கூர் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதனால் மும்பை அணி 224 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து களமிறங்கிய விதர்பா அணி 105 ரன்களில் சுருண்டது. இதனை அடுத்து 119 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் மும்பை அணியின் முதல் இன்னிங்ஸ் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஏமாற்றத்தை தெரிவித்திருக்கிறார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், இது வெறும் சாதாரண பேட்டிங். மும்பை அணி நல்ல தொடக்கத்தை அளித்தது. ஆனால் அதன் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் மிகவும் சுமாராக ஆடி விக்கெட்டுகளை இழந்தார்கள்.
அதேசமயம் விதர்பா அணி தொடர்ந்து மும்பை அணியை அழுத்தத்திலே வைத்திருந்தது. இன்னும் பல சுவாரசியமான கிரிக்கெட் நிகழ்வு நடைபெறும் என நினைக்கிறேன். ஏனென்றால் ஆடுகளத்தில் புற்கள் இருந்தாலும் பந்து கொஞ்சம் திரும்பும். இதன் மூலம் சுழற் பந்துவீச்சாளர்கள் பயனடைவார்கள். விதர்பா அணி இந்தப் போட்டியில் மீண்டும் நுழைந்து விட்டோம் என்று தான் நினைப்பார்கள்.
ஏனென்றால் மும்பை அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. அதன் பிறகு விக்கெட்டுகளை அவர்கள் இழந்ததால் விதர்பா அணியே ஆதிக்கம் செலுத்தியது என்று சச்சின் டெண்டுல்கர் கூறி இருக்கிறார். தற்போது விதர்பா அணியை விட 260 ரன்கள் மும்பை அணி கூடுதலாக அடித்திருக்கிறது. ஒருவேளை மும்பை நிர்ணயிக்கும் இலக்கை விதர்பா சேஸ் செய்துவிட்டால் அது மிகப் பெரிய வெற்றியாக அமையும்.