Rashmika Mandanna – ரன்பீர் கபூர் கன்னத்தில் அறைந்த ராஷ்மிகா மந்தனா.. அய்யய்யோ இப்படி வேற நடந்திருக்கா
சென்னை: ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்த அனிமல் படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக அதீத வன்முறை காட்சிகள் படத்தில் இருப்பதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த சூழலில் அனிமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு நிகழ்வு குறித்து ராஷ்மிகா மந்தனா பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது முதல் படமாக அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமின்றி விஜய் தேவரகொண்டாவுக்கு பல பெண் ரசிகைகளையும் பெற்றுக்கொடுத்தது. மேலும், தமிழில் ஆதித்ய வர்மா எனவும், ஹிந்தியில் கபிர் சிங் என்ற பெயரிலும் ரீமேக்கானது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தியில் சந்தீப்: சந்தீப் ரெட்டி கடைசியாக ஹிந்தியில் ரன்பீர் கபூரை வைத்து அனிமல் என்ற படத்தை இயக்கியிருந்தார். இதில் அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். குல்ஷன்குமார் மற்றும் டி – சீரிஸ் நிறுவனமும், முராத் கெடானியின் சினி 1 ஸ்டூடியோஸ் மற்றும் பிரனாய் ரெட்டி வான்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்தனர்.
கலவையான விமர்சனம்: பான் இந்தியா படமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை கொடுத்தனர். குறிப்பாக படத்தில் அதீத வன்முறை காட்சிகள் கொட்டி கிடப்பதாக குற்றஞ்சாட்டிய ரசிகர்கள்; இயக்குநர் சரியான மனநிலையில்தான் படத்தை எடுத்தாரா என்றும் ஓபனாகவே பேச ஆரம்பித்தனர்.
ராஷ்மிகா மந்தனா: இதற்கிடையே தேசிய அளவில் தற்போது பிரபலமாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் ஓவர் கிளாமர் காட்டியிருந்தார். அது ரசிகர்களை வாயடைக்க செய்தது.மேலும் ஓவர் கிளாமர் காண்பிப்பதற்காக அவர் எக்ஸ்ட்ரா சம்பளம் பெற்றதாகவும் ஒரு பேச்சு ஓடியது. ஆனால் அதனை ராஷ்மிகா மந்தனா திட்டவட்டமாக மறுத்தார். மேலும் கதைக்கு தேவைப்பட்டால் நடிப்பேன் என்றும் விளக்கம் கொடுத்திருந்தார்.
ராஷ்மிகா மந்தனா பேட்டி: இந்நிலையில் அனிமல் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் ராஷ்மிகா கூறியிருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், “அனிமல் படத்தின் காட்சியில் கணவராக நடித்த ரன்பீர் – டிருப்தி டிம்ரியுடன் தூங்கியதால் அவரை அறையும்படி காட்சியை இயக்குநர் வைத்திருந்தார். ஆனால் அந்தக் காட்சியின்போது உண்மையாகவே நான் ரன்பீர் கபூரை அரைந்துவிட்டேன். என்ன செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை.