ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியிட்டவர் கைது

டிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை Deep fake நுட்பத்தால் மார்ஃபிங் செய்த நபரை கைது செய்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
திரை உலகில் முன்னணி நாயகியாக வளம் வருபவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. உலகெங்கிலும் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து மார்பிங் செய்யப்பட்ட ஆபாச வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் அதிகம் பரவியது. மர்ம நபர் யாரோ ஒருவர், பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் வீடியோவை பதிவிறக்கம் செய்து, அதில் ராஷ்மிகாவின் முகத்தை மார்பிங் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த பிரச்சனை பூதாகரமான நிலையில், மூத்த நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.

இதுகுறித்து நடிகை ரஷ்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது போன்ற செயல் தனக்கு மிகுந்த வேதனையளிப்பதாகவும், தனது கல்லூரி அல்லது பள்ளி வருவதில் இது போன்று நடந்திருந்தால், அதன் விளைவுகளை நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது என்றும். இந்த சம்பவத்திற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேதனையுடன் பதிவிட்டிருந்தார். ரஷ்மிகாவின் இந்த பதிவு வைரலானது.

இதையடுத்து, போலி வீடியோ தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவிடம் உதவி கோரினர். அதன் அடிப்படையில் 4 பேரிடம் டெல்லி போலீஸ் விசாரணை நடத்தினர். அப்போது, போலிக் கணக்குகளின் வாயிலாக, VPN உதவியுடன் ராஷ்மிகாவின் போலி வீடியோக்களை 4 பேர் பதிவேற்றம் செய்தது தெரியவந்தது.

: எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை ஷாலினி கேட்ட அந்த கேள்வி.. சத்தம் போட்டு சிரித்த எம்.ஜி.ஆர்.. சுவாரஸ்ய சம்பவம்!

இதையடுத்து மேற்கொண்டு அவர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் Deep fake வீடியோவை உருவாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *