எதிரி கிரகங்களான சனி & சூரியன் சேர்க்கை முடிந்ததால் நிம்மதி பெருமூச்சு விடும் ராசிகள்!

கிரகங்களின் அரசனான சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றினால், நீதியரசராக கருதப்படும் சனீஸ்வரர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசி மாற்றம் அடைகிறார். தற்போது கும்ப ராசியில் இருந்த சூரியன் மார்ச் 14ல் மீன ராசிக்கு மாறியதால், எதிரி கிரகங்களின் சேர்க்கை முடிவுக்கு வந்தது

ஜோதிட சாஸ்திரங்களின் படி, சூரியனும் சனியும் எதிரி கிரகங்களாக இருக்கின்றன, ஆனால் சனி பகவான் சூரியனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியனின் மகன் சனீஸ்வரர் தந்தையின் குணங்களில் இருந்து எதிர்மாறான குணம் கொண்டவர். சூரியனின் குணங்களுக்கு எதிர் குணங்களும், பகைமை உணர்வும் கொண்டவர் சனீஸ்வரர்.

சூரியன் மாதமொரு முறை தனது வீட்டை மாற்றுகிறார். சனியின் ராசியான கும்பத்தில் இருந்து விலகிய சூரியன் இனி அடுத்த ஆண்டு தான் சனியுடன் ஒரே வீட்டில் இருப்பார். இந்த பிரிவினையால் சில ராசிக்காரர்களுக்கு மனம் மகிழ்சியடையும் நிலை ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்…

கும்ப ராசிக்கு அதிபதியான சனி, தன்னுடைய ராசியில் வந்து அமர்ந்திருந்த சூரியனின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனை இருந்த நிலையில், தற்போது, நிம்மதியாக வாழ சனீஸ்வரர் அருள் புரிவார். நிலுவையில் இருந்த திட்டங்கள் வெற்றியடையலாம். வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரம் விரிவடையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் பாக்கியம் கிடைக்கும்.

சனியிடம் இருந்து சூரியன் பிரிந்து சென்றதால், மகர ராசிக்காரர்களுக்கு நிதிரீதியிலான நன்மைகள் நடைபெறும். திடீரென்று பணம் வரலாம், பேச்சு சாதுரியம் அதிகரிக்கும். உங்கள் புகழ் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையும், தொழில் வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கவலைகளும் நிம்மதியின்மையும் மாறும்

சூரியனும் சனியும் ஒரே வீட்டில் இருந்து பிரிந்ததால், ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் முன்னேற்றம், வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் மாற்றம், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. மேலும் சேமிப்புகள் அதிகரிக்கும், தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெற வாய்ப்பு அதிகரிக்கும்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *