ரேஷன் அட்டைதாரர்களே..! இன்று நல்ல வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!
தமிழகத்தில் உள்ள ஏழை மக்கள் பயன்பெற அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் ரேஷன் கடைகள் மூலமாக அரசு வழங்கும் நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்படுகின்றன. மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் உணவு தானியங்களுக்கான தனி ஒதுக்கீடும் கிடைக்கிறது.
தற்போதைய நிலையில் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், பெயர் திருத்தம் செய்ய, கைப்பேசி எண் பதிவு செய்ய, புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிக்க, குடும்ப அட்டையை முகவரி மாற்ற, நகல் அட்டை கேட்டு விண்ணப்பிக்க ஆன்லைனிலேயே முடியும். ஆனால் ஆன்லைனில் போய் செய்ய முடியாத நிலையில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர்களின் வசதிக்காக அரசு அவ்வப்போது ரேஷன் குறைதீர் கூட்டம் நடத்துவது வழக்கம். அந்த வகையில் பொதுவிநியோகத் திட்டக் குறைபாடுகளைக் களையவும், மக்களின் குறைகளை நிவா்த்தி செய்யவும் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் இன்று மார்ச் 9 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் போன்ற சேவைகளை பொதுமக்கள் பெற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.