இந்திய அணியின் ஜாம்பவான் ரவி சாஸ்திரிக்கு பி.சி.சி.ஐ வழங்கவுள்ள மிகப்பெரிய விருது – அதுவும் இன்னைக்கே..

இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ கடந்த 2019-ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் இந்திய வீரர்களுக்கு விருது வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தது.

ஆனால் 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பாதிப்பிற்கு பிறகு தற்போது நான்கு ஆண்டுகளாக அந்த நிகழ்ச்சி நடத்தப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஜனவரி 23-ஆம் தேதியான இன்று ஹைதராபாத்தில் பிசிசிஐ சிறந்த இந்திய வீரர், வீராங்கனை மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்க உள்ளது.

இந்த விழாவில் இந்திய அணியின் வீரர்களும், இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி வீரர்களும், விருதினை வழங்க இருக்கும் முக்கிய நபர்களும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இன்றைய இந்த விழாவில் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவி சாஸ்திரி 80 டெஸ்ட் மற்றும் 150 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 15 சதங்கள் உட்பட 6938 ரன்களை குவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி பந்துவீச்சிலும் 280 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

1983-ஆம் ஆண்டு இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றபோதும், 1985-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்ற போதும் இந்திய அணியில் ஒரு அங்கமாக இருந்த ரவி சாஸ்திரி அதோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ச்சியாக வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *