WPL கோப்பையை வென்றது ஆர்சிபி.. பெங்களூருவின் 17 ஆண்டு கனவை நிறைவேற்றிய மகளிர் அணி,, டெல்லி தோல்வி

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இறுதிப்போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தொடர்ந்து இரண்டாவது முறையாக டெல்லி கேப்பிடல் அணி இறுதிப் போட்டியில் விளையாடியது. மும்பை சிஎஸ்கே அணிகளுக்குப் பிறகு அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணி என்றால் அது ஆர்சிபி தான்.

காரணம் விராட் கோலி டிவில்லியர்ஸ் ,கெயில் போன்ற வீரர்கள் அந்த அணிக்காக விளையாடினர். எனினும் விராட் கோலியால் ஒருமுறை கூட ஆர்சிபி அணிக்கு கோப்பையை இந்த 17 ஆண்டுகளில் வாங்கி தர முடியவில்லை.

இந்த நிலையில் ஆர்சிபி மகளிர் அணி தங்களுடைய இரண்டாவது சீசனிலே இறுதிப் போட்டிக்கு சென்று தற்போது கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் மெக் லென்னிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஜோடியாக அதிரடி வீராங்கனை செபாலி வர்மா மற்றும் அதிரடியாக விளையாடி மூன்று சிக்சர் இரண்டு பவுண்டரி என 27 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார்.

இதேபோன்று கேப்டன் மெக் லென்னிங் 23 ரன்கள் சேர்த்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 64 ரன்கள் சேர்த்தது. இதனை அடுத்து தான் அந்த அணி சரிவை சந்தித்தது. ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை அந்த அணி இழந்தது. டெல்லி அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா மற்றும் அலைஸ் கேப்சி ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேற மரியான்ஸி மற்றும் ஜெஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

ராதா யாதவ் 12 ரன்கள் எடுத்திருக்கும் போது ரன் அவுட் ஆக மின்னு மணி 5 ரன்களில் வெளியேறினார். இதனால் டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 18.3 ஓவரில் எல்லாம் 113 ரன்கள் மட்டும் தான் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய ஆர் சி பி வீராங்கனை ஸ்ரேயங்கா பட்டேல் நான்கு விக்கெட்டுகளையும் சோபி மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இதனை அடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர் சி பி அணி களம் இறங்கியது. கேப்டன் ஸ்ருதி மந்தானா மற்றும் சோபி டிவைன் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 49 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய சோபி டிவைன் 27 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். ஸ்மிருதி மந்தானா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 39 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து இருந்தார். பெங்களூரு அணி 82 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்தது.

இதனை அடுத்து எலைஸ் பெர்ரி மற்றும் ரிச்சி கோஸ் ஜோடி கடைசி வரை நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதன் மூலம் முதல் முறையாக மகளிர் பிரீமியர் லீக் தொடரை ஆர்சிபி அணி வென்றிருக்கிறது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆர்சிபி அணி வெல்லும் முதல் கோப்பை இதுவாகும் இதனால் பெங்களூர் ரசிகர்கள் ஈசாளா கப் நமதே என்று கொண்டாடி வருகிறார்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *