லட்சத்தீவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நாளையே தொடங்க தயார்: இஸ்ரேல் தூதரகம்

புதுடெல்லி: லட்சத்தீவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நாளையே தொடங்க தயார் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடங்குவது தொடர்பாக இந்திய அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க கடந்த ஆண்டு நாங்கள் லட்சத்தீவு சென்றோம். இந்த திட்டத்தை நாளையே தொடங்க இஸ்ரேல் தயாராக உள்ளது.

லட்சத்தீவின் கடல் நீருக்குள் இருக்கும் அழகையும் கம்பீரத்தையும் இதுவரை காணாதவர்களுக்காக, லட்சத்தீவின் வசீகரிக்கும் அழகைக் காட்டும் சில புகைப்படங்களை இத்துடன் இணைத்துள்ளோம். இந்திய தீவுகளை கண்டுகளியுங்கள்’ என தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு சென்று திரும்பியதை அடுத்து, அந்த தீவின் சிறப்புகள் குறித்து அறிந்து கொள்வதற்கான ஆவல் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சுற்றுலா போக்குவரத்துக்கான இந்திய நிறுவனமான மேக் மை ட்ரிப் நிறுவனம், பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துக்குப் பிறகு கடற்கரை குறித்த தேடலில் லட்சீத்தீவு குறித்து தேடுவது 3,400 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *