விரக்தி, காதல் தோல்வியிலிருந்து மீண்ட ஆண்ட்ரியா.. வெளிநாட்டில் என்ன செய்கிறார் தெரியுமா?
பின்னணி பாடகியாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.
தற்போது, ஆண்ட்ரியா பிசாசு 2 , நோ என்ட்ரி, கா, மாளிகை ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மன விரக்தி, காதல் தோல்வியில் இருந்து வந்த நடிகை ஆண்ட்ரியா தற்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
சரத்குமார், ஜோதிகா நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் புடவையில் குடும்ப குத்துவிளக்காக வந்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஆண்ட்ரியா. இப்படம் பெரிய அளவில் வெற்றிப்பெற்று பெரும் வசூலை அள்ளியது. அழகான முகம், அம்சமான நிறம் என அனைத்தும் பொருந்தி இருந்ததால், அனைவர் மனதிலும் இடம் பிடித்தார் ஆண்ட்ரியா.
அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். கமலுடன் விஸ்ரூபம் திரைப்படத்திலும் நடித்து முன்னணி நடிகை பட்டியலில் நினைத்த ஆண்ட்ரியா, தரமணி, துப்பறிவாளன், வட சென்னை, வலியவன், அரண்மனை, என்றென்றும் புன்னகை, மாஸ்டர் உள்ளிட்ட தரமான படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா: ஓரமாக வந்து போகும் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆண்ட்ரியா, நயன்தாரா, சமந்தா போல கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அந்த வகையில் சிபி ராஜுடன் வட்டம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து அனல் மேலே பனித்துளி என்ற படத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார். இப்படம் ஓடிடியில் வெளியானது.
மிஸ்கினின் பிசாசு 2: மேலும், மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும், பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். இதில், ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குளியல் தொட்டியில் ரத்தம் படிந்த கால்களோடு ஆண்ட்ரியா முகம் தெரியாமல் தலைகீழாக கவிழ்ந்து படுத்து சிகரெட்டை கையில் வைத்துக் கொண்டிருக்கும் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான ஆவலை தூண்டியது. அப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு படத்தின் அடுத்த கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ஆண்ட்ரியா நிர்வாண காட்சி ஒன்றில் நடித்திருந்தார். ஆனால், அந்த காட்சியை நீக்கிவிட்டதாக மிஸ்கின் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். இப்படம் வெகுவிரைவில் வெளியாக உள்ளது.