ரீலீசுக்கு ரெடியான ரெட்மீ இயர்பட்ஸ் 5! AI வாய்ஸ் அசிஸ்டெண்டுடன் பக்காவான ஆடியோவுக்கு கேரண்டி!

சியோமியின் பிராண்டான ரெட்மி புதிய TWS இயர்பட்களை அறிமுகப்படுத்த உள்ளது. ரெட்மி பட்ஸ் 5 பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் 2023 இல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.

சில வாரங்களுக்கு முன்பு மற்ற வேறு நாடுகளிலும் ரெட்மி பட்ஸ் 5 விற்பனை தொடங்கியது. இப்போது, இந்தியாவில் பிப்ரவரி 12ஆம் தேதி ரெட்மி பட்ஸ் 5 அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ரெட்மி பட்ஸ் 5 ஐ வெளியிட்டை முன்னிட்டு #Superbuds என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. ரெட்மி பட்ஸ் 5 அமேசான் இணையதளம் மூலமும் விற்பனைக்கு வரவுள்ளது. இயர் பட்ஸ் விற்பனை தொடக்கம் பற்றி அறிவதற்காக “Notify me” என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அமேசான் மூலம் இயர்பட்ஸின் சில முக்கிய அம்சங்களும் தெரிகின்றன.

ரெட்மி பட்ஸ் 5 இன் இந்திய விலை குறித்து எந்த விவரமும் வெளியாகவில்லை. சீனாவில் இந்த இயர்பட்ஸ் விலை 199 யுவான் (இது கிட்டத்தட்ட ரூ. 2,300). உலகளாவிய சந்தைகளில் ரெட்மி பட்ஸ் 5 விலை 46 டாலர் (கிட்டத்தட்ட ரூ. 4,000). இதன்படி இந்த இயர்பட்ஸ் அதன் உலகளாவிய விலையைப் போன்ற விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Redmi Buds 5 இயர்பட்ஸில் 12.4mm டைட்டானியம் டிரைவர்கள் இடம்பெறும். 46db வரை ஹைப்ரிட் ANC ஐ ஆதரிக்கிறது. இது பின்னணி இரைச்சலைக் குறைக்கும் திறன் கொண்டதாகவும் இருக்கும். வெவ்வேறு விதமான ஆடியோ மோட்களும் இந்த இயர்பட்ஸ் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

இரண்டு சாதனங்களுடன் இணைப்பும் இருக்கும். மேலும், இதில் டூயல் மைக் AI வாய்ஸ் அசிஸ்டெண்ட் அம்சமும் உள்ளது. இந்த இயர்பட்ஸ் 38 மணி நேர பேட்டரி ஆயுள் கொண்டாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இயர்பட்ஸ் பற்றிய கூடுதல் விவரங்கள் அது வெளியாகும் நாளில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *