முதலீட்டு ஒப்பந்தம் குறித்து வெளிநாடுகளுடன் பேச்சு

கடந்த 2005ம் ஆண்டு முதல் 20-14ம் ஆண்டு வரை பெறப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டுடன் ஒப்பிடுகையில், 2014 முதல் 20-23 வரையான காலத்தில், அது, இருமடங்காக அதாவது, 49.46 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, பிரிட்டன் போன்ற வெளிநாடுகளுடன் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களுக்கான பேச்சு நடத்தி வரப்படுகிறது.
இந்த ஒப்பந்தங்கள், இரு நாடுகளிலும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் உதவும்.கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில், இந்தியாவில், அன்னிய போர்ட்போலியோ முதலீடுகளின் வரவு, 24 சதவீதம் குறைந்து, கிட்டத்தட்ட 1.69 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதே காலகட்டத்தில், மொத்த அன்னிய நேரடி முதலீடு, 15.50 சதவீதம் சரிந்து, 2.73 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.