Relationship : அதிக ஆபாச வீடியோக்கள் பார்ப்பவரா? உங்கள் செக்ஸ் வாழ்வில் இத்தனை சிக்கல்கள் வருமா?

ஒத்துக்கொள்ள முடியாத ஆசைகள் முதல் உண்மையில்லா எதிர்பார்ப்புகள் வரை நீங்கள் அதிகளவில் ஆபாச வீடியோக்களை பார்ப்பதால் உங்கள் செக்ஸ் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு செக்ஸ் உணர்ச்சிகளை தூண்டுவதற்கு அல்லது பல்வேறு காரணங்களுக்காக மக்கள் செக்ஸ் மற்றும் ஆபாச வீடியோக்களை பார்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றில் பல உங்களுக்கு தீங்கு விளைவிக்காதவை என்றாலும், அதிகப்படியான செக்ஸ் வீடியோக்கள் பார்ப்பதால் உங்கள் செக்ஸ் வாழ்வில் அது சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

அதிக செக்ஸ் வீடியோக்கள் பார்ப்பவர்கள் தங்கள் செக்ஸ் வாழ்வில் திருப்தி கொள்வதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆபாச வீடியோக்களை ஏன் மக்கள் பார்க்கிறார்கள்?

நமக்கு செக்ஸ் உணர்வு ஏற்படும்போது நமது மூளையில் டோபோமைன் என்ற வேதிப்பொருள் சுரக்கிறது. அது உடலுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. அது நமக்கு சந்தோஷத்தையும், நமது உடலுக்கு முக்கியமானதையும் தருகிறது. இதில் செக்ஸ்வல் நடவடிக்கைகளும் அடங்கும். கற்பனைக்கும் இந்த ஆபாச வீடியோக்கள் பங்களிப்பு செய்கின்றன.

ஆபாச படங்கள் சிலருக்கு மனஅழுத்தத்தை போக்க உதவுகிறது. நாம் செக்ஸ்வல் ரீதியாக கிளர்ச்சியடையும்போது, எண்டோர்ஃபின்கள் வெளியாகிறது. இந்த ஹார்மோன்களும் நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. இது இயற்கையாக மனஅழுத்ததை போக்குவதாக செயல்பட்டு, நம்மை அமைதிப்படுத்துகிறது.

ஆபாச படங்கள் பார்ப்பது உறவுக்கு கெடுதலா?

ஓரளவு ஆபாச படங்கள் பார்ப்பது பிரச்னைகளை ஏற்படுத்தாது. ஆனால், அதிகப்படியாக அதை பார்க்கும்போது, அது நெருக்கமான உறவில் சிறிது பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவை பின்வரும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உண்மையில்லாத எதிர்பார்ப்புகள்

ஆபாச படங்கள் காட்டும் செக்ஸ் உறவு என்பது ஒரு காலத்திலும் உண்மை வாழ்வில் நடக்காது. ஏனெனில் அதில் ஸ்கிரிப்ட் படி காட்சிகள் அமைக்கப்படும். ஆனால் உண்மையில் அதுபோல் நாம் செய்ய முடியாது. அதிகளவில் ஆபாச படங்கள் பார்க்கும்போது, உண்மையல்லாத எதிர்பார்ப்புகள் அதிகம் ஏற்படும். இதனால் உங்கள் இணையரிடம் அதிகம் எதிர்பார்த்து ஏமாற்றமடைவீர்கள். அது உங்கள் செக்ஸ் வாழ்வில் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

உரையாடல் சவால்

திறந்த மனதுடன், நேர்மையான உரையாடலை நிகழ்த்தாவிட்டால், தனிப்பட்ட ஒவ்வொருவரின் தேர்விலும் உள்ள வேறுபாடு, ஆபாச படங்களில் காண்பிக்கப்படும் கோணங்கள் இணையரிடையே உரையாடல் தடையை ஏற்படுத்தும். எனவேதான் ஆபாச படங்கள் உங்களுக்கு நல்லதல்ல. எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது அல்லது ஒரு பார்ட்னரிடம் இருந்து அசௌகர்யமான சூழல் ஏற்படும்போது பிரச்னைகள் வருகிறது.

செக்ஸில் அழுத்தம்

செக்ஸில் அழுத்தத்தையும் ஆபாச படங்கள் ஏற்படுத்தலாம். ஏனெனில் தனிநபருக்கு போதிய அளவு இன்பம் கிடைக்காமை அல்லது அவர்களின் சொந்த செக்ஸ்வல் திறன் குறித்து பயம், தங்களை குறைவாக எண்ணிக்கொள்வது போன்றவை ஏற்படும். ஏனெனில் அந்த காட்சிகளில் வருவதுபோல் இல்லையென்ற உணர்வு தோன்றிக்கொண்டே இருக்கும். இதனால் தன்னம்பிக்கை குறைந்து செக்ஸ்வல் இன்பத்தில் தொய்வு ஏற்படுகிறது.

நெருக்கம் குறையும்

அதிகளவில் ஆபாச படங்கள் பார்ப்பதால், உண்மை வாழ்வில் நெருக்கம் குறைந்துவிடும். உங்கள் இணையருடன் உணர்வு ரீதியிலான நெருக்கம் குறைந்துவிடும். ஆழமான செக்ஸ்வல் நடவடிக்கைகள் இல்லாமல் போய்விடும். ஆபாச படங்களே ஆதிக்கம் செலுத்தும்.

அடிமைத்தனம்

தொடர்ந்து பார்ப்பது பழக்கமாகி ஒரு கட்டத்தில் ஆபாச படங்களுக்கு அடிமைபோன்ற நிலை ஏற்படும். இதனால், மிகுந்த சிக்கல்கள் வாழ்வில் ஏற்படும். உண்மை வாழ்வில் செக்ஸில் நாட்டம் குறைந்துவிடும். ஆபாச படத்துக்கு அடிமையாவது உறவையும் பாதிக்கும்.

மன ஆரோக்கியத்துக்கும் குந்தகம் விளைவிக்கும்.

ஒவ்வொருவருக்கும் ஆபாச படங்கள் ஒவ்வொரு விளைவைத்தரும். ஒரு சிலருக்கு அவர்கள் வாழ்வில் ஆபாச படம் நெருக்கத்தை தரும். ஒரு சிலருக்கு அது பிரச்னைகளை கொண்டுவரும். எனவே கவனம் தேவை.

திறந்த உரையாடல், இருதரப்பு மரியாதை அவசியம். எனவே ஆபாச படங்கள் பார்க்கும்போது கவனம் தேவை. அடிமையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பாக ஆபாச படம் பார்ப்பது எப்படி?

இத்தனை பிரச்னைகளை கொண்டுவரும் என்பதால் நாம் ஆபாச படங்களை அறவே தவிர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. சில விஷயங்களை மனதில் வைத்து நீங்கள் ஆபாச படங்களை பார்க்கலாம். ஆபாச படங்களை பார்ப்பது எளிது.

இதை உடலுறவு பாடங்களுக்காக ஆபாச படங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆபாச படங்களில் செக்ஸ் இருந்தாலும், அவை தேவைக்காக காட்சிப்படுத்தப்பட்டவைதான். உண்மை கிடையாது.

கற்பனை காட்சிகளையும், உண்மையையும் வேறுபடுத்தி பார்க்க தெரிந்திருந்தாலே உங்கள் உறவில் எவ்வித பிரச்னைகளும் ஏற்படாது. அதிக நேரம் பார்ப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கட்டாயமாவதையும் தடுக்க வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *