Relationship : அலுவலகத்தில் சக ஊழியருடன் கிரஷ் உணர்வா? கையாள்வது எப்படி? இதோ வழிகள்!

அலுவலகத்தில் கிரஷ் இருந்தாலே தொந்தரவுதான்: அலுவலகத்தில் உள்ள கிரஷ்ஷால் உங்கள் பணி பாதிக்கப்படுகிறதா? உங்களால் பணியில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுகிறீர்களா? இதோ உங்களுக்கு ஒரு வழிகாட்டி. உங்களை காப்பாற்ற பின்வருவனவற்றை பின்பற்றுங்கள். ஏனெனில் நீங்கள் அவர்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

அதே நேரத்தில் நீங்கள் அலுவலகத்தில் ப்ரொபஃஷனலாகவும் நடந்துகொள்ள வேண்டிய கட்டாயமும் உள்ளது. ஆனால் உங்கள் மனம் அல்லாடும். கவலைவேண்டாம். அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். அலுவலகத்தில் நீங்கள் உணர்ச்சிவசப்பட தேவையில்லை. நீங்கள் கையாளலாம். அதற்கான வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்

உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது தான் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் முதல்படி. குறிப்பாக அலுவலக க்ரஷை டீல் செய்யும்போது நீங்கள் மிகவும் கவனமுடன் செய்ல்படவேண்டும். இந்த உணர்வுகளை எவ்வித முடிவுகளுமின்றி ஏற்கவேண்டும்.

கிரஷ்கள் சில நேரங்களில் ஏற்படுவது சகஜம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அது உங்கள் பணிகளை பாதிப்பது குறித்து நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இந்த உணர்வுகள் எவ்வாறானவை என்பது குறித்து நீங்கள் கண்காணிக்க வேண்டும். அவை உங்கள் வேலையில் ஆபத்தை விளைவிக்குமா என்பது குறித்து நீங்கள் முதலில் ஆராய வேண்டும்.

ப்ரொஃபஷனலாக நடந்துகொள்ளுங்கள்

நீங்கள் அலுவலகத்தில் ப்ரொஃபஷனலாக நடந்துகொள்வது மிகவும் அவசியம். உணர்வுகள் ஏற்படுவது பொதுவான ஒன்றுதான். ஆனால் நீங்கள் வேலையையும், உங்கள் தனிப்பட்ட உணர்வுகளையும் பிரித்து வைப்பது மிகவும் அவசியம். பணியை பாதிக்கும் எதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். வேலைகளை சரியாக செய்து முடிப்பதில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

உங்கள் கிரிஷ் குறித்த உங்களின் நடவடிக்கைகள் ப்ரொஃபஷனல் ஸ்டாண்டர்ட்களுக்குள் வரவேண்டும். அலுவலகம் மற்றும் அலுவல்களின் மாட்சிமைகளை தாண்டி அமைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

உடல் மற்றும் உணர்வு ரீதியாக விலகியிருங்கள்

உடல் மற்றும் உணர்வு ரீதியிலாக தொலைவை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஒருவருடன் ஒருவர் நேரடியாக உரையாடுவதை குறைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் உணர்வு ரீதியில் விலகியிருக்க உதவும். நீண்ட உரையாடல் மற்றும் அடிக்கடி பேசுவது ஆகியவற்றை தவிர்த்துவிடுங்கள். இதுவும் உணர்வு ரீதியாக நீங்கள் விலகியிருக்க உதவும்.

மற்ற அலுவலக நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். சில சூழல்களை தவிர்க்கப்பாருங்கள். வேறு ஷிஃப்டில் பணிக்கு வாருங்கள். இதுவும் உங்கள் நெருக்கத்தை குறைக்கும். விலகலை ஏற்படுத்திக்கொண்டு, அலுவல் ரீதியான பொறுப்புகளை அதிகம் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

மற்ற அலுவல் நண்பர்களிடம் இருந்து உதவு கோருங்கள்

நீங்கள் உணர்ச்சிக்கடலில் மூழ்கும் நிலை ஏற்பட்டால், உங்களுக்கு நம்பிக்கையான மற்ற அலுவல் நண்பர்களிடம் இருந்து அறிவுரைகள் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களின் பிரச்னைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டால் போதும், உங்களுக்கு வேறு தீர்வுகள் கிடைக்கும். அவர்கள் உங்கள் அலுவல் நண்பர்கள் அல்லது வெளிப்புற நண்பர்கள் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அவர்களின் கோணம் உங்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் உணர்ச்சி வலையில் சிக்கியிருக்கும்போது உங்களுக்கு அவர்களின் வழினகாட்டல் ஒரு ஊன்றுகோலாக அமையும் வாய்ப்பு உள்ளது. உங்கள் உணர்வுகளை மேலாண்மை செய்ய இது உங்களுக்கு உதவும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *