Relationship : பிரசவத்துக்குப்பின் செக்ஸ்! கவனத்தில்கொள்ள வேண்டியவை என்ன?
உங்களுக்கு சிசேரியன் அல்லது இயற்கை முறையில் குழந்தை பிறப்பு என எதுவாக இருந்தாலும், குழந்தை பிறந்த பின் பாதுகாப்பான முறையில் செக்ஸ் வைத்துக்கொள்வது நல்லது. குழந்தை பிறந்த பின் போஸ்ட்பார்டம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பெண்களின் உடலில் கொண்டுவருகிறது. அது நமது ஆசைகள் மற்றும் சௌகர்யம் இரண்டையும் பாதிக்கிறது. இந்த மாற்றம் 6 வாரங்களில் ஏற்படுகிறது.
சில நேரங்களில் எப்போது மற்றும் எப்படி செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற தகவல் முழுமையாக கிடைக்கப்பெறாமல் போவது, தம்பதிகள் சில தவறுகளை செய்ய நேரிடுகிறது. எனவே தம்பதிகள் இருவருக்கும் கர்ப்பத்திற்கு பின் செக்ஸ் வைத்துக்கொள்வது எப்படி என்று தெரிந்துகொள்வது அவசியம்.
பிரசவத்திற்கு பின் 6 வாரங்களுக்கு செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது. இது பெண்ணின் உடல் குறிப்பாக பெண்ணுறுப்பு குணமடைய உதவுகிறது.
பிரசவத்திற்கு பின் செக்ஸ் வைத்துக்கொள்ள எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும்?
குழந்தை பிறப்பிற்கு பின்னர் 6 வாரங்கள் கழித்தால் உடல் நலம் தேறிவிடும். பிரசவித்த இரு வாரங்களில் உடலுறவு வைத்துக்கொண்டால், அதிக உதிரப்போக்கு, கர்ப்பப்பை தொற்று ஆகியவை ஏற்படும் என்று கூறப்படுகிறது. எனவே பிரசவத்திற்குப்பின் 4 வாரங்கள் காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. சிசேரியன் அல்லது பல்வேறு முறைகளிலும் செய்யப்பட்ட பிரசவத்தால் தையல் போட்டிருப்பின் 6 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இந்த காலகட்டம் கருப்பை சுருங்கவும், பெண்ணுறுப்பில் ஏற்பட்ட காயங்கள் மறையவும், உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை முறையாக்கவும் உதவுகிறது. குறிப்பிட்ட கால அளவுக்கு முன்னர் செக்ஸ் வைத்துக்கொள்வது உடலில் உபாதையை ஏற்படுத்துகிறது. எனவே தேவைப்பட்டால் மருத்துவரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்க வேண்டும்.
பிரசவத்துக்கு பின் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது என்ன?
முன்விளையாட்டை அதிகரியுங்கள்
குழந்தை பிறந்தபின் செக்ஸ் வைத்துக்கொள்ள முடிவு செய்தீர்கள் என்றால், முன்விளையாட்டை அதிகப்படுத்துங்கள். உணர்வு ரீதியாக உங்கள் இணையருடன் சேர்ந்திருக்க முயற்சி செய்யுங்கள். உடல் ரீதியான பிணைப்பைவிட அது சிறந்தது. நன்றாக உடலில் மசாஜ் செய்யுங்கள். தொடுதல், உணர்வை தூண்டும் பேச்சுக்கள் என மகிழ்ந்திருங்கள். பொறுமையுடன், இருவரின் சம்மதத்துடன் உடல் ரீதியான இணைவு இயற்கையில் நடக்க வழிவகை செய்யுங்கள். இதனால் உங்கள் பெண்ணுறுப்பில் தேவையான திரவம் தானாகவே சுரந்து உங்களுக்கு வலி ஏற்படுவதை தடுக்கும். எனினும், உடலுறவின்போது வலி ஏற்பட்டால் மருத்துவரை அணுகவேண்டும்.
கருத்தடை பயன்படுத்துங்கள்
எப்போது உடலுறவு கொண்டாலும் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துங்கள். அது உங்களுக்கு தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கும். பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றை தடுக்கும். கருத்தடை மாத்திரைகள், காண்டம், கருத்தடை சாதனங்கள் என உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுங்கள். பாலூட்டும்போது கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதால் எந்த பிரச்னையும் ஏற்படாது. மருத்துவரின் அறிவுரையுடன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது.
திறந்த உரையாடல்
பிரசவத்திற்குப்பின் உங்கள் இணையருடன் உங்களின் உணர்வுகள் மற்றும் பிரச்னைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். குறிப்பாக திருப்தியான உடலுறவுக்கு இந்த உரையாடல் மிகவும் அவசியம். நீங்கள் என்ன உணர்கிறீர்கள்? உங்களின் அக்கறை, உங்களின் ஆசை ஆகியவற்றை திறந்த மனதுடன் விவாதிக்க வேண்டும். இது உங்கள் உடல் மற்றும் மனதில் ஏற்படும் உணர்வுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள உதவும். உங்களுக்கு ஏதேனும் மாற்றம் தென்பட்டால் கட்டாயம் மருத்துவரை அணுகவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகுங்கள். அப்போதுதான் உங்களால் முழுமையாக ஈடுபட முடியும்.
கெகெல் உடற்பயிற்சிகள் செய்வது அவசியம்
பிரசவத்திற்கு பின்னர், செக்ஸ் நலனுக்கு கெகெல் உடற்பயிற்சிகள் செய்வது அவசியம். இந்த உடற்பயிற்சிகள் இடுப்புப்பகுதி தசைகளை வலுப்படுத்தவும், நெகிழ்தன்மையை ஏற்படுத்தவும் செய்யப்படுகிறது. இந்த உடற்பயிற்சிகள் பெண்ணுறுப்பு இறுக்கமாகி, உடலுறவில் திருப்தி ஏற்பட வழிவகுக்கிறது. கெகெல் உடற்பயிற்சிகள் செய்வதற்கு தினமும் 15 நிமிடங்கள் போதும். இது உங்கள் இடுப்புப்பகுதி தசைகளை பலப்படுத்தவும், பெண்ணுறுப்பில் உணர்ச்சிகளை அதிகரிக்கவும் உதவுகிறது. இது உங்களுக்கு செக்ஸ் இன்பம் அதிகரிக்க உதவுகிறது.
சுகாதாரத்தை பராமரியுங்கள்
பிரசவத்துக்குப்பின்னர், உடலுறவுக்குப்பின்னரும் முன்னரும் பெண்கள் நல்ல சுகாதாரத்தை பேணுவேண்டும். உள்ளாடைகளை தினமும் மாற்ற வேண்டும். நன்றாக தினமும் குளிக்க வேண்டும். உங்களின் பிறப்புறுப்பை நன்றாக கழுவவேண்டும். இருபுறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தொற்றுகள் ஏற்படாது. பருத்தியாலான உள்ளாடைகளை மட்டும் அணியுங்கள். நீர்ச்சத்துடன் எப்போதும் இருக்க வேண்டும். உங்கள் பெண்ணுறுப்பை காற்றோற்றத்துடன் வைத்துக்கொள்ளுங்கள்.
லுப்ரிகன்ட்களை உபயோகியுங்கள்
உடலுறவை மேலும் இனிமையாக்கவும், எரிச்சலை போக்கவும் லுப்ரிகன்ட்களை பயன்படுத்துங்கள். பிறப்புறுப்பு வறண்டு போகும் பிரச்னைகள் உள்ளவர்கள் இதை பயன்படுத்துங்கள். லுப்ரிகன்ட்களும் பலவகைப்படும் தண்ணீர்போன்று, சிலிக்கான் போன்று, எண்ணெய் போன்று என பல்வேறு வகைகளில் அது வருகிறது. இது காண்டம்களுடனும் வருகிறது. இருவருக்கும் எரிச்சல் ஏற்படுத்தாத லுப்ரிகன்ட்களை பயன்படுத்துங்கள். சிலிக்கனில் இருப்பது நல்லது. நீண்ட நாள் வரும்.